(Reading time: 11 - 22 minutes)
Kaarigai
Kaarigai

"அக்கா.." உமாவின் குரலில் கண்களை துடைத்து கொண்டு திரும்பினாள் பவித்ரா.

"உன்னை ஏன்கா அந்த மாமா திட்டுனாரு? " உமாவின் முகம் பயத்தால் வெளிறிப்போயிருந்தது.

"ஐயோ என்ன உமா, அழுதியா என்ன?" அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு இயல்பாக பேசியவன், "அந்த மாமா கைல என்னால தான் அடிபட்டுடுச்சு அதான் கோவத்துல திட்டுனாங்க. அதுக்கெல்லாம் அழலாமா? போ போயி படி. நாளைக்கு எக்ஸாம் இருக்குல்ல." பவித்ரா சமாதானமாக சொல்ல, அங்கிருந்து நகர்ந்தாள் உமா.

உமாவை அனுப்பிவிட்டு வெளியே வந்தாள் பவித்ரா. அங்கு தோட்டத்தில் அமர்ந்திருந்த லட்சுமியையும் அவரின் மடியில் தலை சாய்த்திருந்த சத்யாவையும் கண்டவள் மனம் நெகிழ்ந்தது. அவன் கையில் இருந்த காயம் இப்போது அவளுக்கு வலித்தது.

அவர்களை தொந்திரவு செய்யமல் உள்ளே சென்றவள் அங்கிருந்த ஜன்னல் மேல் இருந்த திட்டில் அமர்ந்து வானத்தில் தெரிந்த நிலவை பார்த்தாள்.அந்த வானில் இருக்கும் நிலா தூரத்தில் இருந்து பார்க்கும் போது அழகுதான். அதன் கறைகள் தெரிவது இல்லை. அதன் அருகே சென்று பார்த்தால் தான் தெரியும் அதில் எத்தனை பள்ளம் மேடு என...அது போல தான் ஏன் வாழ்க்கையும்... ஒரு பெருமூச்செறிந்தாள் பவித்ரா.

அவள் மனம் நடந்ததை மீண்டும் அசைபோட்டது. அவளை அடிக்க வந்தவர் ஒவ்வொருவரையும் அவன் வெறி கொண்டு அடித்தது, அவள் தலை முடியை பிடித்த கமலக்கண்ணன் முகத்தில் அடித்த போது சத்யாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் என எல்லாமும் அவள் நினைவில் இருந்தது. "அவன் என்ன உன் லவர்ரா...உன்னை ஏதாச்சும் சொன்னா அந்த பொங்கு பொங்கறான்" அந்த கமலக்கண்ணன் சொன்னது ஏனோ தேவை இல்லாமல் அவள் காதுகளில் ஒலித்தது. "இல்லை, அவன் வீட்டில் அவன் பொறுப்பில் இருக்கும் எனக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தில் அவன் அப்படி நடந்து கொண்டிருக்கலாம்" அவள் மனம் அதற்க்கு சமாதானம் செய்தது.

"அப்போ அவன் கையில் பட்ட காயத்துக்கு நீ ஏன் அப்படி பதறுன?" இன்னொரு புறம் மூளை கேள்வி எழுப்ப, "எனக்கு உதவி செய்ய வந்துதான் அவருக்கு அடிபட்டிச்சு அதனால தான்" மீண்டும் அவள் அவளையே சமாதானம் செய்து கொண்டாள்.

Episode # 14

Episode # 16

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.