(Reading time: 11 - 22 minutes)
Kaarigai
Kaarigai

சொல்லியிருந்தால்...அவள் வாழ்வில் பவித்ரா என்ற ஒருத்தி இல்லாமலே போயிருப்பாளே...

எழுந்து வெளியே வந்தவன் தோட்டத்தில் அமர்ந்திருந்த லக்ஷ்மியின் அருகே சென்று அவருக்கு கீழே அமர்ந்தான்.

"அம்மா சாரி மா." சத்யாவின் மன்னிப்புக்கு லட்சுமியிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை.

"அம்மா ப்ளீஸ் சாரி மா. நான் செஞ்சது தப்பு தான் மா. அவளை அங்க பார்த்ததும் என் உயிரே போயிடுச்சும்மா. அவனுக எல்லாம் பொறுக்கிக மா. நான் மட்டும் அவளை பாக்காமல் போயிருந்தா...நெனைச்சே பாக்க முடியலைம்மா...அந்த கோவத்துல தான் மா...சாரி மா..." சத்யாவை நிமிர்ந்து பார்த்தார் லட்சுமி.

"சத்யா அவளை பத்தி தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னப்போ நான் ரொம்ப பெருமை பட்டேன். அவளை பத்தி தெரிஞ்ச அடுத்த நாளே அவளை ட்ரீட் பண்ணுன டாக்டர் கிட்ட பேசிட்டு வந்த. அவளுக்கு வாழணும்ன்ற ஆசையே இல்லை. ஏதோ கடமைக்காக அவ வாழறா. அவ அவளுக்காக வாழனும். அவளுடைய மனநிலை மாறனும். அதுக்காக நான் அவளுக்கு என்னவெல்லாம் வேணுமோ அதெல்லாம் செய்வேன்னு வந்து சொன்னப்போ உன்னை நெனைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். என் பையன் இவ்ளோ சின்ன வயசுல கூட இவ்வளவு மனமுதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் இருக்கானேனு. ஆனா இப்போ...சத்யா வார்த்தைகளை சிந்தினா அள்ள முடியாது. அவ நிலை தெரிந்தும் நீ வார்த்தைகளை சிதற விட நினைச்ச. வேண்டாம் சத்யா. அவளை திருப்பி ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டு..." -லட்சுமி

"அம்ம்மா..." -சத்யா

"அவ வாழ்க்கையில் இனி நீ தொந்திரவு பண்ணாத. அவ இப்படியே இருந்தாலும் பரவால்லை. ஏதோ ஒரு கோவத்துல நீ இன்னொரு முறை இப்படி பேசி, அப்போ உன்னை தடுக்க நானும் இல்லைனா...அய்யயோ அந்த பொண்ணு மனசு செத்துடும் சத்யா...அது பெரிய பாவம்.,.. அந்த பாவத்தை என் பையன் பண்ண நான் அனுமதிக்க முடியாது" லட்சுமி சொல்ல, அதிர்ந்து போனான் சத்யா.

"அம்மா...சாரி மா...ப்ளீஸ் மா...எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க... இனிமேல் இப்படி நடக்கதுமா. பவித்ராவே விரும்பி முழு மனதோடு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா. அதை கண்டிப்பா நடத்தறேன் மா. என்னை நம்புங்கமா. நீங்களே என்னை நம்பலைனா எப்படிம்மா" கண்கள் கலங்கியது சத்யாவுக்கு.

அவனின் தலைமுடியை ஆதரவாக கோதியவர், "உன்னை நம்பாம வேற யாரை நான் நம்ப போறேன் சத்யா" எனவும், "தேங்க்ஸ் மா" என்றவன் அவரின் மடியில் தலையை சாய்த்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.