(Reading time: 12 - 24 minutes)
Nenchil thunivirunthaal

"தர்மான்னா எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே உயிர் ஆதி! அவளை கல்யாணம் பண்ணிக்கும் போது உலகத்தையே ஜெயித்த மாதிரி உணர்ந்தேன். நீ பிறக்கும் போது அந்தக் கர்வம் இரட்டிப்பானது. ஆனா, அவளும் பெண் தானே! அன்னிக்கு நடந்தது தெரிந்தால் எங்கே அவ என்னைவிட்டு நிரந்தரமா போயிடுவாளோன்னு தான் நான் பொய் சொன்னேன். அவளைப் போக விடாமல் செய்ய எனக்கு வேற வழி தெரியலை!" இறுகிப் போனதாய் ஒலித்தது அவர் குரல்.

"நான் செய்தது தப்புத்தான்! அதற்கான தண்டனையை அவக் கொடுத்துட்டா!" ஏனோ தந்தையின் கண்கள் கலங்கியதை அவனால் சகிக்க இயலவில்லை.

"உடையான் உங்களுக்கு அவமானமா போயிட்டான்ல!" சுறுக்கென்று தைத்தன அவன் வார்த்தைகள்!

"அவனும் உன்னை மாதிரி என் இரத்தம் தானேடா!"  அவ்வார்த்தையில் பனித்துப் போனது அவனது மனம்!

"நான் செய்த பாவத்துக்கு...அவன் என்னடா செய்வான்? இந்த நிமிடம் வரைக்குமே தர்மா ஒருத்தி என்னை மன்னிக்கணும்னு ஒரே காரணத்துக்காகத் தான் நான் மௌனமா இருக்கேன். அவளே என்னை மன்னிக்கலைன்னா, அவன் மட்டும் எப்படிடா மன்னிப்பான்?அன்னிக்கு அவனைப் பார்க்கும் போது மன்னிப்புக் கேட்க தோணுச்சு, செய்த பாவத்துக்கு அவன் என்னத் தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக்க தோணுச்சு! ஆனா, நீ அவனைக் கூட்டிட்டுப் போயிட்ட! தர்மா எவ்வளவு நல்ல குணத்தோட வளர்த்திருக்கா அவனை...உன் பேச்சுக்கு கட்டுப்பட்டு மறுவார்த்தை பேசாமல் உன் கூட வந்தான்!" பெருமிதம் மிளிர்ந்தது அவர் குரலில்!

"நான்தான் சொன்னேனே! உங்களுக்கு அப்பறம் நான் தான் அவனுக்கு உலகம்! என் ஒரு வார்த்தை அவனுக்கு வேத வாக்கு! அம்மாவுக்குத் தெரியாமல் அந்த வீட்டுக்கு நான் வந்ததும் அவனுக்காக தான்!" தமையனின் குரலில் ஏற்பட்ட கர்வமானது, தந்தையினை ஒரு நொடி ஆச்சரியத்தில் உறைய வைத்தது.

"அண்ணி! அண்ணா எங்கே தான் போனாரு?" தமையனின் இல்லாமை ஏனோ அவன் மனதினை மேலும் வேதனைப்படுத்தி பார்த்தது.

"வந்துடுவார் உதய்! நீ பூஜையில இரு! நான்தான் வீட்டுக்கு நெய் கொண்டு வர அனுப்பினேன். அத்தை கோவிலுக்கு கொடுக்கணும்னு சொன்னாங்க, மறைந்து வைத்துட்டு வந்துட்டேன்! பக்கத்துல வந்துட்டாராம்!" இளவலிடமிருந்து பெருமூச்சு வெளியானது.

"அழ வைக்கிறீங்க என்னை!" வாடிய முகத்துடன் சென்றான் உடையான். ஏனோ மனம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.