(Reading time: 12 - 24 minutes)
Nenchil thunivirunthaal

முழுதும் வேதனைப் பரவியது அவளுக்கு! ஆலய வாயிலையே அவள் எதிர்நோக்கி இருக்க, அவள் பதற்றமான சூழல் தர்மாவின் பார்வைக்கு எட்டியது.

"என்ன மாயா? பெரியவன் எங்கே?" இவரிடம் எப்படி சமாளிப்பது? கைகளைப் பிசைந்தவண்ணம் அவள் நிற்க...தர்மாவின் கவனம் வாயிலை அடைந்தது. சாதாரண நிகழ்வாக முடிந்திருக்கும் ஆதித்யா வந்திருந்தால்.. முதலில் உள்ளே நுழைந்ததோ இராகவனே! எத்தனை வருட தவமோ...அன்று அவர் முகத்தினைக் கண்ட மாத்திரம் அனைத்தும் ஓர் நொடி உறைந்துப் போனது அவருக்கு! கோபங்களோ, வெறுப்புகளோ எது அவர்தம் மனதில் இருந்தப்போதிலும் அச்சமயம் அவற்றை மறந்திருந்தார் தர்மா என்பதே உண்மை! எத்தனை வருட தவம் இன்று அவள் முகத்தினைக் காணும் போது அனைத்து வேதனைகளுமே பூர்த்தியானது இராகனவனின் மனதினில்! ஆலயம் என்றும் பாராமல் கண்கள் கலங்கின தர்மாவிற்கு! ஆதியோ எனக்கு ஏதும் தெரியாது என்பதாய் நின்றான். காதலுக்கு முக்கியத்துவம் தருவதா? துரோகத்திற்கு முக்கியத்துவம் தருவதா?

"அப்பாடா...!அண்ணா வந்தாச்சு!" இளையவனின் வார்த்தை அவர் சிந்தையைக் கலைத்தது.

"அண்ணி நெய் எடுத்துட்டு வர அனுப்பினேன்னு சொன்னாங்க..! டப்பாவே காணோம்?" அவன் விசாரணையில் ஒரு நொடி அதிர்ந்துப் போனாள் மாயா.

"நீ போ..! ஒருவேளை அவனுக்கு எங்கேன்னு இடம் தெரியாம போயிருக்கும்!" அச்சமயம் நிச்சயம் தன் முதற்புதல்வனின் மேல் பெருமிதம் எழவில்லை. ஆயிரம் இருப்பினும் முகம் நோக்கும்போது கோபம் எழ தானே செய்யும். தமையனார் வந்துவிட்ட நிம்மதியில் வழிப்பாட்டு நிகழும் இடத்தில் சென்று அமர்ந்தான் உடையான். தர்மாவோ கனத்த மனதுடன் இராகவனாரை மதியாமல் நகர்ந்தார். நிச்சயம் அந்நிகழ்வு அவர்தம் மனதினைத் தைத்திருக்கும் அதில் ஐயமில்லை. சாங்கிய சம்பிரதாயப்படி உடையானுக்கு துளசிமாலை அணிவிக்கப்பட்டது. ஏனோ அந்நிகழ்வில் அவன் தந்தை மட்டும் மூன்றாம் மனிதராக நின்றிருந்தார்.

"பையன் பதினெட்டாவது வருடம் போறான்னு கேள்விப்பட்டேன்! கொஞ்சம் கவனமா இருக்க சொல்லுங்க, தடை ஏற்படலாம்!" ஒரு எச்சரிக்கை மணியை அடித்தார் குருசாமி. பணிவோடு அதனையும் ஏற்றுக்கொண்டார் தர்மா. தாய் மனதில் ஒன்று மட்டுமே உறுதியாய் இருந்தது.

"நிச்சயம் அவனை சோதிக்க இறைவனுக்கு மனம் இருக்காது!" ஆம்..! கபடமற்ற மனம் கொண்டவர்களைச் சோதிக்க யாருக்குத் தான் மனமிருக்கும்? அவர் அறியவில்லை...இறைவன் விதிவிலக்கானவன் என்று! கழுத்தில் துளசி மாலை, கரு வேட்டி சட்டை, இடையில் துண்டோடு, நெற்றியில் சந்தனக் கோலத்தில் இளவலைக் கண்டப்போது ஏதோ தீர்க்கத்தரிசி போல அவன் தோற்றக்கொண்டதாய் ஓர் உணர்வு ஆதித்யாவிற்குள்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.