(Reading time: 12 - 24 minutes)
Nenchil thunivirunthaal

"என்னம்மா?"

"நான் கோவிலுக்கு கிளம்புறேன் பெரியய்யா!" என்றாள் மிகுந்த பணிவோடு!

"சரிம்மா! அம்மா இருப்பாங்க...என்னால வர முடியலைன்னு சொல்லிடு!" தயக்கத்துடன் ஒலித்தது அவர் குரல்!

"சரிங்க பெரியய்யா!" விடைப்பெற்று கிளம்பினாள் கங்கா. அவள் வெளியேறவும் உள்ளே நுழைந்தது ஆதித்யாவின் வாகனம்! யாரென்று ஒருமுறை திரும்பி பார்க்க, அதுவரையில் கண்டிராத வாலிபன் காரிலிருந்து இறங்குவதைக் கண்டவள், இதழை சுழித்துக் கொண்டு தன் இலக்கினை நோக்கி நடக்கலானாள். ஏனோ அங்கு வருவதற்கு அவன் மனம் விழையவில்லை தான்! எனினும் அக்காரியம் புரியத்தான் வேண்டும், வேறு உபாயமில்லை. பெருமூச்சுடன் அவ்வில்லத்துள் காலடி வைத்தான் அவன் அத்தனை ஆண்டங்கள் வனவாசத்தின் பிறகு, தந்தையைக் காண..!

"அப்பா....அப்பா...!" பரிச்சயமில்லாத குரல் ஒலிக்க, அதுவும் உச்சரித்த தொனி, வார்த்தை அனைத்தும் புதியதாகி இருக்க வெளிவந்தனர் இல்லம் இருந்தோர்! 'அப்பா' என்ற வார்த்தையே பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுத் தான் ஒலிக்கிறது அங்கே! அவனது குரல் ஒலித்ததை உணர்ந்தவர், உறைந்துப் போய் நின்றவரானார். வந்திருப்பது அவனா? மாடியிலிருந்து பார்த்தவருக்கு கண்கள் சட்டென கலங்கி நின்றன.

"ஏ...யார் நீ?" என்ற தங்கையின் குரல் இராகவனை ஒரு நொடி உறை வைத்தது. அவருக்கு அடையாளம் தெரியாமல் போயிருக்கும்! அவன் அறிவான் அல்லவா?

"ஆதித்ய கரிகாலன்!" தன் நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலே அடங்கிப் போனது அவரது குரல்! ஆனந்தம் தாண்டவமாட, கீழிறங்கி வந்தார் இராகவன்.

"இப்போதும் மாற முடியாதுல்ல? ஏன்பா இப்படி இருக்கீங்க? நான் அவ்வளவு சொல்லியும் நீங்க இப்படி பண்ணா என்ன அர்த்தம்? அங்கே ஒருத்தன் உங்களுக்காக தவம் கிடக்குறான்!" அவன் மொழிகள் அவ்விருவருக்கு மட்டும் புரிந்ததாய்!

"என்கூட வாங்க!" அவன் அழைத்துமே வர தயங்கிய தந்தையை கண்டவனுக்கே ஏனோ விளக்க இயலாத கோபமே வந்தது.

"இதுவே எனக்காக நான் கூப்பிட்டிருந்தா வந்திருப்பீங்க தானே! அவன்கிட்ட மட்டும் ஏன்பா பாரபட்சம் பார்க்கிறீங்க?வாங்கப்பா!" அவரால் அச்சமயம் 'இல்லை' என்று மட்டுமே தலையசைக்க இயன்றது.

"நான் அவனுக்காக வர மாட்டேன்னு சொல்லலைடா! என்னால, உங்க அம்மாவை தைரியமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.