(Reading time: 10 - 19 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 24 - சாகம்பரி குமார்

"ரிஇப்போது சொல்லுஉன்னால் அபியை சரி செய்ய முடியுமா?"

கங்காதரன் ஆர்வமாக கேட்டார். அதிரதன் அவரை கூர்ந்து நோக்கினான்.

"அது ரொம்ப சுலபமான விசயம் இல்லை. ஆனால் முயற்சி செய்வேன். ஏனெனில் நானும் ஒரு விஞ்ஞானி தான். அபிதாவிற்கு நேர்ந்தது என்னுடைய தொழிலுக்கான களங்கம். அதை சரி செய்யும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.. ஆனால்… "

"என்ன?"

"அதற்கு முன் அபிதாவை மனதளவில் தயார் செய்ய வேண்டும். அதற்கான சாவி அதிதியிடம் இருக்கிறது. முதலில் அதிதியை சைக்கலாஜிக்கலாக தயார் செய்ய வேண்டும். அபியின் நிலையை அவள் புரிந்து கொள்ளணும். அவள் சொன்னால்தான் அபியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.."

"நீ சொல்வது சரிஆனால் அபி இது போன்ற சிகிச்சைக்கு ஒப்பு கொள்ள வேண்டுமே. "

"அபியின் முழு சம்மதம் பெற்றபின்தான் இதனை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் ரிவர்ஸ் ஜெனிடிக்ஸ் முறை இன்னும் வரையறுக்கப்படவில்லை.. "

"அப்படி என்றால்?"

"ஏற்கனவே நடைபெற்ற மாற்றங்கள் முழுமையாக ரிவர்ஸ் செய்ய ஒரு குறிப்பிட்ட மெத்தட் மட்டுமே பொருந்தாது. பல வகையான ட்ரீட்மெண்ட் தர வேண்டும். அதற்கு முன் அபிக்கு என்ன நடந்தது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு ப்ளான் செய்யணும். அதுக்கு… "

"அதுக்க?"

"க்ருபா அங்கிளை சந்தித்து பேச வேண்டும். அபியின் பயாலஜிக்கல் மாற்றங்கள் பற்றிய தெளிவான விவரங்கள் வேண்டும்."

"இப்போதே போக வேண்டாம். வெளியாட்கள் வருவதை அபி விரும்ப மாட்டாள். அந்த வீடும் மரவீடு மாதிரிதான்வீட்டில் எங்கிருந்து பேசினாலும் கேட்கும். அவளுக்கு தெரியாமல் ரகசியம் பேச முடியாது. நானே க்ருபாவை வெளியே வரச் சொல்லி மெஸேஜ் பண்ணிதான் சந்திப்பேன். "

"இப்ப அப்படி அவரை வெளியே வர சொல்லலாமே."

"க்ருபா அடிக்கடி வெளியே வர்றதில்லை. இன்னிக்கே ரெண்டாம் முறையாக வெளியே வந்தான்னா.. அபிக்கு சந்தேகம் வந்திடும்."

"?"

"கம் ஆன் ரதன்அந்த பொண்ணு கோவிச்சிட்டு வெளியே போயிட்டா தேடி கண்டுபிடிக்க முடியுமா?.. ஒரு தடவை அப்படி ஆயிடுச்சு. க்ருபா அவளை தேடி அலைய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.