(Reading time: 10 - 19 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"அப்புறம் உங்க அப்பாபோல நானும்…" பதறிப்போனவளாக அவன் அருகே வந்து கையை நீட்டி பேச விடாமல் தடுத்தாள்.

"அப்படி சொல்ல கூடாது…. அப்படி சொல்லாதீங்க…" படக்கென்று கண்ணில் நீர் வந்து விட்டது. அதிரதனைவிட கங்காதரன் இதனை ரொம்பவும் ரசித்தார்.

"உண்மையை சொன்னால் பதட்டப்படுகிறாய்ஓகேகூல்…" என்று அதிதியின் கண்ணீரை துடைக்க. ஆரமபித்தான்.

அதிதி தலையை ஆட்டி பேச ஆரமபிக்க… அவர்களை தனிமையில் விடுத்து கங்காதரன் விலகினார்.

"இனிமேல் இது போன்ற தவறான வார்த்தைகளை என்னிடம் சொல்ல வேண்டாம்"

"சரி.. சரி" அவளை சமாதானம் செய்யும்போதே அபியின் விஷயத்தை இவள் எப்படி எடுத்து கொள்வாள் என்று தோன்றியது.

அதற்குள் சமாதானம் ஆகி விட்ட அதிதி பேச ஆரமபித்தாள்.

"எனக்கு என்ன சொல்வது என்றே தெரியலை. இத்தனை வருடங்கள் கழித்து அம்மாவின் மீதிருந்த களங்கத்தை துடைச்சிட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி"

மேலும் எதையோ கேட்க நினைத்து தடுமாறினாள்.

"ஓகேஇன்னும் ஏதோ சந்தேகம் நிற்கிறதுபோல.. அதையும் கேட்டு விடு"

"அன்னிக்கு நான் பார்த்த காட்சிக்கான விளக்கம் புரியுது. அந்த அங்கிளை அப்பான்னு நினைச்சிருக்காங்கஅப்படினா அப்பா அம்மாவை சரியாக நடத்தவில்லையா?"

"ம்இருக்கலாம்.. இரண்டு பேருக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்த அந்நியோன்யம் குறைந்து போயிருக்கலாம். இது சகஜமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். குழந்தைகள் பிறந்த பின் அவர்களை பராமரிப்பதில் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான திட்டங்களில் முழு கவனமும் போவதால் இப்படி ஆகும். அருகில் இருந்தாலும் விலகி இருப்பது போல தோன்றும்"

"புரியுதுஆனால் இதை எப்படி இவ்வளவு தெளிவா சொல்றீங்க"

"நமக்கு நடந்தால்தான் அனுபவம் எனறில்லைஅடுத்தவர் வாழ்க்கையில் இருந்தும் புரிஞ்சிக்கலாம். என் நண்பன் ஒருவனுக்கு இப்படி நடந்துள்ளது. காதல் திருமணம்.. வீட்டை பிரிந்து வந்து நடந்த திருமணம். ஒரே குழந்தைதான்இரண்டு பேருக்கும் அலுவலக வேலை பளுஅத்துடன் குழந்தை பராமரிப்பு.. அதிலும் அவனுடையது நியூக்ளியர் ஃபேமிலி  குழந்தையுடன் கூடுதல் டைம் செலவழிக்க வேண்டியதாகி விட்டது. அந்த விலக்கத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.