(Reading time: 10 - 19 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

வேண்டியதாயிடுச்சு. நல்லவேளை மழை பெய்ததால லே அவுட் மாதிரி அவள் உருவம் தெரிஞ்சு.. கெஞ்சி அழுது கூட்டிட்டு வந்தான்."

"ஓகே.. ஐ அண்டர் ஸ்டாண்ட். நாம நாளைக்கு அங்கிளை பார்ப்போம்"

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது அதிதி கண்ணை கசக்கியபடி எழுந்து வந்தாள்.

"மாமா நீங்க எப்போ வந்தீங்க."

"இப்பதான் வந்தேன்உனக்கு உடல்நிலை சரியில்லைன்னு ரதன் சொன்னான். என்னாச்சு?"

"எனக்கு ஒண்ணும் இல்லையேதூங்கிட்டேன் போல.. ம்.. இப்ப மணி நாலாகுதா?. அசந்து தூங்கி போயிட்டேனா?. சாரி மாமா நீங்கள் வந்ததுகூட தெரியாம தூங்கிட்டேன்."

"பரவாயில்லை.. நானே இப்போது தான் வந்தேன். "

"நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. நான் காபி போட்டு வர்றேன்."

"ஆமாம்மா. நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வர்றேன்". கங்காதரன் முகம் கழுவ சென்றார்.

அதிரதனிடம திரும்பிய அவள்..

"நீங்கள் சாப்பிட்டீங்களாநீங்கள் எப்ப வந்தீங்க?"

"போன வேலை முடிஞ்சிடுச்சு. உடனேயே வந்துட்டேன்அரௌன்ட் டென்"

"பத்து மணிக்கேவாநான் அப்பவே தூங்கிட்டேனா?"

"ஹனிகதவை திறந்து போட்டு தூங்கி இருக்கே.. " அதிரதன் கேலியாக சொல்லவும்..

"இல்லை.. நான் கதவை தாழ் போட்டேனே.. நீங்கள் கிளம்பியதும் கதவை சாத்திட்டு…"

"சமைக்க போறதா சொன்னே"

"ஆமாம்நான் அதைத்தான செஞ்சேன். ம்ஹாங்.. அப்போ சித்தி வந்தாங்க.."

"லட்டு கொடுத்தாங்க.. காணாததை கண்ட மாதிரி நீயும் வாங்கி வாயில போட்டு கிட்ட.."

"வாயில போட்டா?…  ஏன் கிண்டலா பேசறீங்க…"

"அவங்கள்ட்ட பேசாதேன்னு சொன்னேன்"

"நானா போகலைஅவங்க வந்தாங்க.."

"சரி.. வந்தாங்க பேசினாங்க.. போனாங்கன்னு இருக்கணும். அந்த லட்டை ஏன் சாப்பிட்ட?"

"அது நெய் லட்டுரொம்ப நாள் மிஸ் பண்ணது"

"தாத்தா இல்லைதடுப்பார் யாரும் இல்லைபக்கி மாதிரி சாப்பிட்டுருக்க. எங்கிட்ட கேட்டிருந்தால் நான் வாங்கி தந்திருப்பேன்ல"

"ஏன் இவ்வளவு கோபப்படனும்என்னாச்சு?"

"என்னாச்சா…? ஆறு மணி நேரமா மயக்கத்துல இருந்த.. "

"நான் தூங்கிட்டேன் அப்படினு நினைச்சேன்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.