(Reading time: 9 - 17 minutes)
Kaarigai
Kaarigai

இருக்கும். இருந்தாலும் அவனாக வந்து அவளிடம் அதை பற்றி கேட்க மாட்டான் என்று அவளுக்கு தெரியும். அவனை பற்றி எண்ணியதும் அவள் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

அதற்குள் அவளின் செல்பேசி அழைக்க அதை எடுத்து பார்த்தவள் அதே புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில்வைத்தாள்.

"சத்யா..." -பவித்ரா

"பவித்ரா, எங்க இருக்க? நான் கோயில் வாசல்ல நிக்கறேன்" -சத்யா

"உள்ள வந்துடுங்க சத்யா. நான் உள்ள தான் இருக்கேன்" பவித்ரா சொல்லவும், "ஓகே வரேன்" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு வெளியில் இருந்த பூக்கடையில் பூஜைக்கான தட்டு ஒன்றையும் வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே பார்வையால் பவித்ராவை தேடியபடி வந்தவன் பார்வையில் பட்டாள் அவனுக்காக அங்கிருந்த கர்ப்பகிரகத்தின் முன் காத்திருந்த பவித்ரா. இந்த ஒரு வருடத்தில் இது போல அவ்வப்போது அவள் ஏதேனும் கோவிலுக்கோ வெளியே எங்கேனும் சென்றாலோ அவனை அழைத்து கூட்டி கொண்டு போக சொல்வாள். அதனால் இம்முறையும் அவன் வேறு எதுவும் வித்தியாசமாக யோசிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால் அன்றோடு அவள் சொன்ன ஒரு வருடம் முடிவடைகிறது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அன்று மாலை வரையுமே அவள் அதை பற்றி எதுவும் பேசாமல் இருந்ததால் அவள் மறந்திருப்பாள் என்று அவனும் ஒன்றும் பேசாமல் விட்டான். எங்கே ஏதாவது பேசி அவள் ஏதாவது வேறு மாதிரி சொல்லிவிட்டால் என்ன செய்வது என மனதின் ஓரம் ஒரு கவலை இருந்தது.

இந்த யோசனையுடன் வந்தவனுக்கு அவளை இப்படி பார்க்க போகிறான் என்று ஒரு சதவீதம் கூட எதிர்பார்ப்பு இருக்கவில்லை.

சத்யா கண்களை அகற்றாமல் அவளையே நோக்க, எத்தனை முயன்றும் பவித்ராவின் முகம் வெட்கத்தில் சிவப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

தழைய கட்டிய பட்டு புடவை, அழகான நீண்ட பின்னல் முன்னால் விட்டு, அவளின் அகன்ற விழிகளில் மை இட்டு நெற்றியில் இருந்த அந்த சிவந்த பொட்டும் அதன் மேல் இருந்த அந்த சிறிய குங்கும கீற்றும் அவளின் சிவந்த உதடுகளில் இருந்த புன்னகையும் எல்லாவற்றையும் தாண்டி மருதாணி பூசியதை போல சிவந்திருந்த கன்னங்களும் இடம் பொருள் எல்லாம் மறக்க செய்திருந்தது சத்யாவை.

"தம்பி கொஞ்சம் தள்ளிக்கோங்கோ" ஒரு மாமி அவனின் பின்னால் இருந்து குரல் கொடுக்கவும் தான் அந்த மாயவலையில் இருந்து வெளியே வந்தான் சத்யா.

அவளை நோக்கி அவன் வர, இன்னும் கொன்று தின்னும் வெட்கம் அவளை நிமிர விடாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.