(Reading time: 9 - 18 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

உட்காரு “ தனக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டார்.

“ சௌமி “நின்றபடி சொன்னாள்.

“உட்காருமா“    பாட்டியும்  சொல்லவே .. . அமர்ந்தாள் 

“என்ன படிக்கிற?” - தாத்தா 

“விஸ்காம் பைனல் இயர்”

“முடிச்சிட்டு என்ன செய்ய போற ?“

“படம் டைரக்ட் பண்ண போறேன் “ மலர்ந்த முகத்துடன் கூறினாள் 

அவள் பதிலைக் கேட்ட தனுஷ் குடும்பத்தினர் “வாவ்” “சூப்பர் மா” எனச் சிலர் பாராட்ட சௌமிக்கு கால் தரையில் நிற்கவில்லை.   

“வெரி குட்  .  .  . டைரக்டர் ஆகத் தான்   விஸ்காம் படிக்கிறியா ?” தாத்தா கேட்க

“ஐயோ இல்ல தாத்தா . . இன்ஜினியரிங்ல இருந்து தப்பிக்க . . .”

“  புரியலையே”

“இங்க அண்ணா அக்கா ரெண்டுபேரும் இன்ஜினியரிங்  . . ஆனா  டிவி ரிமோட்,க்கு  பேட்டரி மாத்தனும் , டியூப்லயிட்  மாட்றது, பியூஸ் கட்டை போடறது  இப்படி சில்லறை வேல கொடுத்து கேவலப்படுத்துவங்க பாருங்க கண்கொள்ளாக்காட்சியா இருக்கும்  . சரியாய் செய்யலைன்னா என்னத்த இன்ஜினியரிங்  படிச்சன்னு வறுத்தெடுப்பாங்க  “

“இது கூட பரவல்ல  தாத்தா  . . .  அம்மா  குக்கர் வெச்சிட்டு  திடீல்னு  அக்காவை “எத்தனை  விசில்டி  ஆச்சுனு ?” கேப்பாங்க   . . அவ  செல்போன்  நோண்டிட்டே  தப்பா சொல்லுவ . .  இன்ஜினியரிங் படிச்சிருக்க  ஒன்னு ரெண்டு கூட  கவுண்ட்  பண்ணத்  தெரிலன்னு கதாகாலேட்சபம் ஆரம்பிச்சா கடவுளே ஓடிப்போய்டுவார்  . அதனால்தான்  சின்னப்பவே  முடிவு பண்ணிட்டேன்.  இன்ஜினியரிங் படிக்கக்  கூடாதுனு”

அறையினுள் இருந்த பிருந்தாவிற்கு அத்தனையும் துல்லியமாய் காதில் விழுந்தது. சௌமி தன் மானத்தைக் கப்பல் ஏற்றுவது தெரிந்து “முருகா “ என நொந்துக்  கொண்டாள். கோபம் வராமல் சிரிப்பு தான்  வந்தது. தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வியந்தாள். 

சௌமி சொன்னதைக்  கேட்டு அனைவரும் சிரித்துவிட்டனர்.  “ உன் அக்காவ எங்க வீட்ல குக்கர் விசில் கவுண்ட் பண்ணச் சொல்லவே மாட்டோம் மா ” என்ற பாட்டி தனுஷை பார்த்துக் கண்சிமிட்ட தனுஷ் கூடத்   தன்னை மறந்து பெரியதாகச் சிரித்துவிட்டான் . 

இன்னும் கொஞ்ச நேரம் சௌமியை பேச விட்டால் குடும்ப மானம் கப்பலேறிவிடும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.  

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.