(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 04 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

"பாட்டி ரெடியா? கெளம்பலாமா?" ராம் விசாலத்தின் அறையில் வந்து அழைக்க, "டேய் ராம் கண்டிப்பா வரணுமாடா? எனக்கு அந்த மெஷின் எல்லாம் பார்த்தாலே ஒரு மாதிரி பயமா இருக்கு" விசாலம் தயங்கியபடியே நிற்க, "ஐயோ பாட்டி, எவ்ளோ வேலையை அசால்ட்டா செய்துட்டு இப்போ எதுக்கு இந்த பயம்? இது ஒரு ரெகுலர் செக்கப் தான பாட்டி...வாங்க வாங்க டைம் ஆச்சு" ராம் சொல்லவும் சற்று பயத்துடனே வந்தார் விசாலம். அவர்கள் இருவரும் வருவதை கண்ட தமிழ்செல்வி அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து நின்றாள்.

"போலாமா செல்வி?" விசாலம் கேட்க, சரி என தலையசைத்தாள் தமிழ்செல்வி.

அவளும் தங்களுடன் வருவதில் ராம்க்கு துளியும் விருப்பம் இல்லை. அனால் பாட்டியின் முன்னாள் ஏதாவது சொன்னால் அவர் தேவை இல்லாமல் தன்னைத்தான் திட்டுவார் என அமைதி காத்த ராம் விறுவிறுவென முன்னால் செல்ல, தமிழ்செல்வி விசாலத்துடன் நடந்தாள்.

"என்ன செல்வி இது கைல ஏதோ புக்ஸ் வெச்சுருக்க?" அவள் கையில் இருந்த புத்தகங்களை பார்த்த விசாலம் கேட்க, "இல்லை பாட்டி, இதெல்லாம் அசோக் கிட்ட வாங்குனேன் படிக்க. படிச்சு முடிச்சாச்சு. அதான் இப்போ போகும்போது அவருகிட்ட கொடுத்துறலாம்னு எடுத்துக்கிட்டேன்" தமிழ்செல்வி பதில் சொன்னாள்.

"இந்த அசோக் பையன் வெச்சுருக்க புக் எல்லாம் இந்த மாதிரி தான் இருக்கு. உனக்கு இதெல்லாம் புரியுதா?" ஆச்சர்யமாக விசாலம் கேட்க, தமிழ்செல்வி பதில் சொல்வதற்குள் ராமின் குரல் அவர்களை எட்டியது "இப்படி வந்தா நாளைக்கு தான் ஹாஸ்பிடல் போயி சேர முடியும் பாட்டி" என.

அவர்கள் அந்த மருத்துவமனையின் உள்ளே நுழையும் போதே அவர்களுக்காக காத்திருந்தான் அசோக்.

ராம் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு காரை பார்க்கிங்கில் நிறுத்த செல்ல, அசோக் அவர்களை கூட்டி கொண்டு உள்ளே சென்றான்.

அங்கிருந்த அந்த அறையில் விசாலத்தின் பெயர் மற்றும் விவரங்களை சொல்லி அசோக் அவர்களை உள்ளே அழைத்து செல்ல, வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தாள் தமிழ்செல்வி.

சிலநிமிடங்களில் வெளியே வந்த அசோக், "கொஞ்சம் டைம் ஆகும் தமிழ். நீ இங்கயே இருக்கியா? இல்லை என் கேபின்க்கு வரியா?" எனவும் "இல்லை இல்லை நான் இங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.