(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

பேரபசங்க  ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி கொள்ளு பேரனுகளையும் பார்க்கணும்ல. அதுக்குள்ள இப்படி பேசுனா எப்படி?" தமிழ்செல்வி சொல்லவும் விசாலம் சிரித்தார்.

அவருக்கு இதமாக இருக்கும் வண்ணம் எண்ணெய்  தேய்த்து அவரின் கால்களை அழகாக பிடித்து விட்டபடி பேசி கொண்டிருந்த தமிழ்செல்வியை கண்ட அவரின் மனதில் சட்டென அந்த எண்ணம் தோன்றியது.

அவளிடம் கேட்க அவர் வாயை திறக்கவும் தமிழ்செல்வியின் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

"ஒரு நிமிஷம் பாட்டி. அம்மா கூப்டறாங்க" என்றவள் யோசனையுடன் அழைப்பை ஏற்றாள். மறுமுனையில் பதட்டத்துடன் பேசினார் கலைவாணி.

"தமிழ் நீ கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரியா? கொஞ்சம் அர்ஜெண்ட்டுடா" அவரின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த தமிழ்செல்வி "அம்மா என்னாச்சு? ஏதாவது பிரெச்சனையா?" அவளுக்கு பதற்றம் தொற்றி கொண்டது.

"நீ வீட்டுக்கு வா தமிழ். சொல்றேன்" என்றவரிடம் அதற்க்கு மேல் எதுவும் கேட்காமல் அழைப்பை துண்டித்தவள் விசாலத்திடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

வீட்டிற்குள் நுழையும் போதே அவளுக்காக காத்திருந்தார் கலைவாணி. அவரின் முகம் அழுததை உணர்த்தியது. இன்னொரு அறையில் இருந்த கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் இலக்கியா. அதுவே தமிழுக்கு ஏதோ ஒரு விபரீதத்தை உணர்த்தியது. இன்னும் காவ்யா பள்ளியில் இருந்து வந்திருக்கவில்லை. தன்னுடைய கைபையை அங்கிருந்த டேபிளில் வைத்தவள் "அம்மா என்னாச்சு? ஏதாவது ப்ரோப்லேம்மா? இலக்கியா ஏன் சீக்கிரமே வந்துட்டா? உடம்பு முடியலையா?" என்றபடி இலக்கியா படுத்திருந்த அறைக்குள் நுழைய முயல, அவளின் கையை பிடித்து நிறுத்திய கலைவாணி, "அவள் செத்து தொலையட்டும் தமிழ். இப்படி ஒரு பொண்ணு எனக்கு பிறக்கவே இல்லைனு நான் நெனைச்சுக்கிறேன்" என்றவர் முகத்தை மூடியபடி அழத்தொடங்கினார்.

"அம்மா அம்மா என்னாச்சு? என்னம்மா ஏதேதோ சொல்றிங்க? ஏம்மா இப்படி எல்லாம் பேசறீங்க?" அழும் கலைவாணியை தேற்றியபடி கேட்டாள் தமிழ்செல்வி பதற்றத்துடன்.

"நான் என்ன பண்ணுவேன் தமிழ். சொத்து இல்லைனாலும் மானம் மரியாதையோடு தான வாழ்ந்தோம். இப்படி பண்ணிட்டாளே.இனி என்ன பண்ணுவேன்... "அவர் மீண்டும் அழத்தொடங்க, "அம்மா ப்ளீஸ் என்னனு சொல்லுங்கம்மா" அவளுக்கு என்னவென புரியாமல் குழப்பத்துடன் கவலையும் சேர்ந்து கொள்ள கேட்டாள் தமிழ்.

"இந்த பாதகத்தி ப்ரெக்னன்ட்டா இருக்கா தமிழ்....ஐயோ நான் இனி எப்படி உயிரோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.