(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இருப்பேன். இப்படி ஒழுக்கம் கேட்டு போயி நிக்கறாளே...ஏதோ ஒரு பணக்கார பையனை நம்பி இப்படி வந்து நிக்கறா. நான் யாரை போயி கேப்பேன்...படிச்சு இந்த குடும்பத்துக்கு ஆதரவா இருப்பான்னு நெனைச்சேன். இப்படி பண்ண்ணிட்டாளே....இவளை..." என்றவர் வேகமாக எழுந்து சென்று உள்ளே சுருண்டு கிடந்தவளை அடிக்க தொடங்க, உள்ளே ஓடிய தமிழ் "அம்மா அம்மா அடிக்காதிங்க ப்ளீஸ் " என ஒருவாறு அவரை இழுத்து ஒரு இருக்கையில் அமர வைத்தவள் தலைமுடி களைந்து படுக்கையில் அமர்ந்திருந்த இலக்கியாவை நெருங்கி அவளின் களைந்த தலைமுடியை திருத்த முயல பட்டென அவளின் கையை தட்டி விட்டாள் இலக்கியா.

"பார்த்தியா பார்த்தியா, அவளுக்கு திமிரை...பண்றதெல்லாம் பண்ணிட்டு..." கலைவாணி மீண்டும் அவளை அடிக்க செல்ல, "சும்மா மேல கையை வெக்காதிங்க. உங்களுக்கு நான் எந்த சிரமமும் தர மாட்டேன். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். அவரு ஊருல இல்லை. வந்ததும் நானே பார்த்துப்பேன். நீங்க யாரும் இதுல ஓவரா கத்தி பெரிய ஆளு ஆக வேண்டாம்." அவள் சொல்லி முடிக்கும் முன் அவளை அறைந்திருந்தாள் தமிழ்செல்வி.

அவள் அடித்ததும் கோபத்துடன் அவளை முறைத்த இலக்கியாவை பார்த்த தமிழ்செல்வி, "உன் வாழ்க்கையை நீயே என்ன பார்த்துக்குவ? சொல்லு. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல எதுவுமே மறைக்க முடியாது தெரியுமா? எப்படி இலக்கியா உன்னால இப்படி பேச முடியுது? அம்மா, நான் செஞ்சது தப்புனு அழுதிருந்தா கூட பரவாலை. ஆனா நீ தப்பே செய்யாத மாதிரி பேசரையே...உனக்கு கொஞ்சம் கூட கூச்சமா இல்லையா?" அதற்கும் மேல் அங்கே நிற்காமல் வெளியே வந்த தமிழ், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தாள்.

எவ்வளவு பெரிய பிரச்சனை இது, இந்த பெண் என்னமோ சர்வ சாதாரணமாக பேசுகிறாள். இவளுக்கு இந்த உலக நடப்பு தெரியுமா? கடவுளே...இதை பொறுத்து தீர்க்கும் பிரச்சனையும் இல்லை....இனி என்ன செய்வது என யோசனையுடன் தலையில் கையை வைத்து அமர்ந்தாள்.

"தமிழ்...."தயக்கத்துடன் அவளின் முன்னே வந்து நின்ற கலைவாணியை பார்த்தவளுக்கு அவரின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

"பேசாம ஏதாவது ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயி?" கலைவாணி தயங்கியபடி சொல்ல அதிர்ந்து போனாள் தமிழ்."அம்மா...அது பாவம் மா." என்றவள் ஒரு முடிவுடன் எழுந்தவள் "அம்மா வாங்கம்மா" என அவரையும் அழைத்து கொண்டு இலக்கியாவின் அறைக்குள் நுழைந்தாள்.

"அம்ம்மா அந்த பையன் யாருன்னு கேளுங்கம்மா" என்றாள் படுத்திருந்த இலக்கியாவை பார்த்து.

"அதான் கேக்கறாளே...சொல்லுடி...இப்போ மட்டும் வாயை மூடிட்டு உக்காந்திருக்க?"கலைவாணி மிரட்ட, "என் காலேஜ்ல படிக்கிற என் சீனியர்." என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.