(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இருக்கேன். ராம் சார் வந்துருக்காரு. அப்பறம் வந்தா காணம்னு நெனைப்பாரு. இதோ உங்க புக்ஸ். படிச்சிட்டேன்" என்றாள் கையில் இருந்த புத்தகங்களை அவனிடம் நீட்டியபடி.

"அதுக்குள்ளவா? நான் ஒரு வாரமா ஹாஸ்பிடலுக்கு வீட்டுக்கும் சும்மா தூக்கிட்டு சுத்தறனே தவிர ஒரு பக்கம் கூட படிக்கல. நீ என்ன எந்திரன்ல வர சிட்டி மாதிரி இப்படி அப்படி புரட்டி பார்த்துட்டு கொண்டு வந்துட்டியா?" அசோக் ஆச்சர்யமாக கேட்க, தமிழ்செல்வி சிரித்தாள்.

காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த ராமின் கண்களில் விழுந்த இந்த காட்சியில் அவனுக்கு கோபம் துளிர்த்தது. அவன் வேக நடையுடன் அவர்களை நெருங்க, அவனை கண்ட அசோக், "வாடா. பாட்டிக்கு உள்ளே செக்கப் போயிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சநேரம் ஆகும்" அசோக் சொல்ல, ராமை கண்ட தமிழ்செல்வியின் முகத்தில் இருந்த புன்னகை துணியை கொண்டு துடைத்ததை போல மறைந்து போனது.

ராமிடம் சிறிது நேரம் பேசிய அசோக், தமிழ்செல்வியிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்ப, இப்போது அவள் புறம் திரும்பிய ராமின் பார்வை நெருப்பை கக்கியது.

"இது என்ன ஹாஸ்பிடல்லா இல்லை பார்க்கா? இதுக்கு தான் கூடவே வந்தியா?" அடிக்குரலில் அவன் கர்ஜிக்க, அவன் பேசுவதின் அர்த்தம் புரியாமல் பார்த்தாள் தமிழ்செல்வி.

"என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி பாக்கற? அவனை பார்க்க தான வந்த? உன்னை பத்தி தெரியாம என் பாட்டி உன்னை கூடவே கூட்டிட்டு சுத்தறாங்க" இப்போது அவன் பேசுவதன் அர்த்தம் விளங்க, "சார் தப்பான பார்வையோடு பார்த்தா எல்லாமே தப்பா தான் தெரியும். தப்பு உங்க பார்வைல இருக்கு. என்கிட்ட இல்ல" அவள் நிதானமாக அதே சமயம் அழுத்தமாக அவனை போலவே சொன்னாள்.

"ஏய்ய்ய் என்னை பாத்தா தப்பானவன்னு சொல்ற?"அவனின் பார்வையில் தெரிந்த கோபத்தில் இது மட்டும் வீடாக இருந்திருந்தால் அவளை கொன்றிருப்பானாயிருக்கும்.

"நான் யாருனு உங்களுக்கு தெரியாது. ஆனா அசோக் உங்க பிரென்ட். அவரை பத்தி உங்களுக்கு தெரியாதா? அவரை பத்தி தெரிஞ்சுருந்தா இப்படி எல்லாம் பேசமுடியுமா? என்ன பிரெண்ட்ஸ்...சே..." என்றவள் அவனிடம் இருந்து விலகி அந்த புறமாக சற்று தள்ளி இரண்டு மூன்று இருக்கைகள் இருக்க, ஒரு வயதானவர் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அவள் சொன்னதை கேட்ட ராம்க்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் நினைவு தெரிந்ததில் இருந்து அவனை குறை கூறி யாரும் பேசியது இல்லை. அவனையோ அவன் செய்வதையோ தவறு என யாரும் சொன்னதும் இல்லை. வீட்டிலும், பள்ளியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் மத்தியிலும், அலுவலகத்திலும் அவன் ராஜாவாகவே வளம் வருவான். அப்படி பட்டவனை ஒருத்தி கைநீட்டி அடித்தாள், சே என முகத்திற்கு நேராக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.