(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"என்கிட்டே முகம் கொடுத்து பேசமாட்டேங்கறா. நான் வேணா கேட்டு பாக்கட்டுமா மா?" தமிழ் கேட்க, "இல்லை தமிழ். என்கிட்டயே கத்தறவ இது தான் சாக்குன்னு உன்னை திட்டுவா. இன்னைக்கு அவ காலேஜ் போயிட்டு வரட்டும். என்னனு நானே கேக்கறேன் தமிழ். நீ கெளம்பு நேரமாச்சு. " கலைவாணி சொல்லவும் இரண்டு மனமாக தலையாட்டிவிட்டு கிளம்பினாள் தமிழ். அவளுக்கு எனோ இரண்டு நாட்களாக இலக்கியாவின் முகத்தில் தெரிந்த பயமும் கவலையும் ஒருவித பயத்தை உண்டாக்கியது. அவள் கத்தி கொண்டிருந்தால் கூட பரவாயில்லை போல என தோன்றியது. பஸ்சில் ஏறி அமர்ந்தவளுக்கு விசாலத்தின் வீட்டை அடையும் வரையுமே இதே யோசனை தான்.

"ஆமாம் பாட்டி கேக்கணும்னு நெனைச்சேன். எங்க பரத்? ரெண்டு மூணு நாளா பாக்கவே இல்லையே?" வழக்கம் போல பாட்டியின் கால்களுக்கு தைலம் பூசியவாறு  அவரிடம் பேசி கொண்டிருந்தாள் தமிழ்.

"அவனுக்கு ஏதோ இண்டஸ்ட்ரியல் விசிட்னு சொல்லிட்டு பெங்களூரு போயிருக்கான். நாளைக்கு ஈவினிங் வந்துருவான். எப்போ பாரு ஏதோ ஒரு விசிட்னு போயிட வேண்டியது" விசாலம் சொல்லவும், "பாட்டி காலேஜ்ல இதெல்லாம் தான ஒரு என்ஜோய்மேன்ட். அதுக்கு அப்பறம் பிசினஸ், ரெஸ்பான்சிபிலிட்டிஸ்னு நெறைய வந்துரும்" தமிழ்செல்வி சொல்லவும், "அதுவும் சரி தான்" என்றார் விசாலம் ஆமோதிப்பாக.

"இன்னும் ஒரு நாலு மாசத்துல பார்த்ததும் எம்பிஏ முடிச்சிடுவான். அவனையும் ராம் கூட பிசினஸ் பாக்க அனுப்பிட்டா போதும். அதுக்கு அப்பறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிச்சிட்டா என் கடமை முடிஞ்சுது. ஹ்ம்ம் பதினேழு வருஷம் முன்னாடி என் பொண்ணு இவங்க ரெண்டு போரையும் எங்க பொறுப்புள்ள விட்டுட்டு அவ புருஷனோட போயி சேர்ந்துட்டா. எப்படி வளர்க்க போறனோனு பயந்துட்டு இருந்தேன். எங்க வீட்டுக்காரர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால இந்த பசங்க அவருகிட்ட பேசவே பயப்படுவாங்க. என் கிட்ட தான் கேப்பாங்க எது வேணும்னாலும். அவருக்கு பாசம் இருந்தாலும் வெளிய காட்டிக்க மாட்டாரு. பெத்தவங்க இல்லாத பசங்களை நல்லபடியா வளக்கணும்னு சொல்லிட்டே இருப்பாரு. அவரு மூணு வருஷம் முன்ன ஒரு அட்டாக் வந்து படுக்கைல விழுந்துட்டாரு. அதுக்கு அப்பறம் ராம் முழு பொறுப்பும் எடுத்துகிட்டான். எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரையும் நல்ல படியா தான் வளர்த்திருக்கேன்னு நெனைக்கிறேன். எந்த கெட்டப்பேரும் இல்லாம நல்லபடியா ஒரு கல்யாணத்தையும் பண்ணிட்டா நிம்மதியா போயி சேர்ந்துடுவேன்." விசாலம் பெருமூச்சு விட, "என்ன பாட்டி இப்படி சொல்லிட்டிங்க. அதோட எப்படி முடியும் உங்க கடமை? உங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.