(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

திட்டினாள்...அவன் கோபத்தில் கைமுஷ்டியை அங்கிருந்த இருக்கையில் குத்தினான். அவன் கோபம் தீராமல் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாக வேகமாக நடந்தான். அவளோ எதை பற்றியும் கவலைப்படாமல் அங்கே அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்ததை பற்றி மறந்தவளாக அங்கிருந்த பத்திரிக்கையை படித்து கொண்டிருந்தாள்.

அவளை கண்ட ராம்க்கு அவளின் முகத்தில் இருந்த நிதானம் புரிந்தது. அவள் முகத்தில் இருந்த அமைதியையும் தாண்டி அவளிடம் ஒரு கம்பீரம் இருந்தது. கர்வம் இருந்தது. அவளின் அழகை அவள் அலட்சியமாக எண்ணினாள். ஆனால் அந்த கர்வம் எதனால் வந்தது?  ராம்க்கு அது விளங்கவில்லை. அவன் முன் தலை நிமிர்த்தி நின்ற அவளின் அந்த கர்வம் அவனுக்கு பிடிக்கவில்லை. போயும் போயும் தன்னிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண செவிலி பெண். அவளுக்கு இவ்வளவு திமிரா என கோபம் வந்தது. இந்த திமிரையும் கர்வத்தையும் அடக்கி அவளை தன முன்னால் கெஞ்ச வைக்கவேண்டும் என்று மனதில் வன்மம் வளர்ந்தது.

அவள் செய்யும் செயல்கள், பேசும் பேச்சுக்கள் எல்லாவற்றிலும் இருந்த நேர்மையால் வந்தது அந்த கர்வமும் திமிரும் என அவனுக்கு புரியவில்லை. அவளிடம் அந்த நேர்மை இருக்கும் வரை இதெல்லாம் அத்தனை எளிதாக போகாது எனவும் அவனுக்கு விளங்கவில்லை.

"ராம் பாட்டிக்கு பிக்ஸ் பண்ணிருக்கும் பேஸ் மேக்கர் ரொம்ப நல்லா செட் ஆயிருக்கு. இந்த ஒன் இயர்ல அவங்களுக்கு எந்த காம்ப்ளெக்சிட்டியும் வரல. எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கு. எதுவும் பயப்பட தேவை இல்லை. பாட்டி எப்பவும் போல இருக்கலாம்" அசோக் சொல்லி கொண்டிருக்க, "அவரை பத்தி உங்களுக்கு தெரியாதா?" என்ற தமிழ்செல்வியின் வார்த்தைகள் ராமின் காதுகளில் மீண்டும் ஒலித்தது.

"டேய்ய் என்னடா உன்னைத்தான் கேக்கறேன். நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா?" அசோக் சற்று உரக்க கேட்க, தன்னிலை அடைந்தவன் "ஆம்" என தலையசைக்க, "என்னாச்சு இவனுக்கு?" என்று நோக்கினான் அசோக்.

என்னதான் கலகலப்பாக பேசிக்கொண்டாலும் கடந்த மூன்று வருடங்களில் ராம் சற்றே விலகி போய்விட்டதாக தோன்றியது அசோக்கிற்கு. ராம்க்கு என புது நண்பர்கள் கிடைத்திருந்தனர். அவனும் ஓய்வு நேரத்தை அவர்களுடனே செலவிட்டான். முன்பு பள்ளியில் படிக்கும் போது அசோக் இல்லாமல் ராம் எங்குமே சென்றது இல்லை. இதை எல்லாம் எண்ணி பெருமூச்சு விட்ட அசோக், "சரிடா இப்போ மெடிசின்ஸ் எல்லாம் கொஞ்சம் டோஸேஜ் கம்மி பண்ணி எழுதிருக்கேன்." என்று ஒரு மருந்து சீட்டை ராமின் கையில் கொடுத்தான்.

ராம் அந்த மருத்துவமனையிலேயே இருந்த மருந்தகத்தில் மருந்து வாங்க செல்ல,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.