(Reading time: 17 - 34 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தமிழ்செல்விக்கு கொடுக்க என எடுத்து வைத்திருந்த சில புத்தகங்களை பார்த்த அசோக் அவள் தான் அன்று கொடுத்த புத்தகங்களை எல்லாம் படித்து முடித்து விட்டாளே, இதை கொடுக்கலாம் என்று எண்ணி அறையில் இருந்து வெளியே  வந்தான்.

அவன் அறையை விட்டு வெளியே வந்தவன் பார்வையில் சில பல அடி தூரத்தில் யாரோ ஒருவருடன் பேசி கொண்டிருந்த தமிழ்செல்வி பட்டாள். அவன் அவர்களை நோக்கி செல்ல காலெடுத்து வைக்க, தமிழ்செல்வி பேசி கொண்டிருந்தவரிடம் விடை பெற்று பாட்டியிடம் செல்லவும், ஆவலுடன் பேசிவிட்டு திரும்பி வந்தவனை பார்த்து புன்னகைத்தான் அசோக். அசோக்கிற்கு பதிலுக்கு புன்னகைத்தவன் "என்ன அசோக் உனக்கு இன்னைக்கு எதுவும் எமெர்ஜென்சி கேஸ் இல்லையா?" என்றபடி அவனிடம் நின்று பேச்சு கொடுத்தான். சில நிமிடங்கள் அந்த நபரிடம் பேசிய அசோக் அவர் கிளம்பும் நேரம் கேட்டான்."ஆமாம் நீ பேசிட்டு இருந்தியே அது...???" கேள்வியாக அந்த நபரை அசோக் பார்க்க, "யாரு??? ஓ....தமிழா? ஷி வாஸ் மை  கிளாஸ்மேட்" என்ற அந்த மற்றவன் அங்கிருந்து நகர "தமிழ் ஒரு மருத்துவ மாணவியா?" என்று அதிர்ச்சியில் நின்றான் அசோக்.

அவனுக்கு இப்போது புரிந்தது அவளுக்கு எப்படி அவன் கொண்டு செல்லும் அந்த புத்தகங்களின் மேல் பிடிப்பு ஏற்பட்டது என. பாட்டியின் உடல் நிலையில் அவளாக சில விஷயங்களை செய்தது அவளின் முந்தைய வேளையில் கிடைத்த அனுபவமாக இருக்கும் என்று எண்ணியவனுக்கு இப்போது தெளிவானது. ஆனால் அவள் ஏன் இந்த வேலையை செய்கிறாள்? ஒரு வேளை அவள் குடும்பம் வறுமை காரணமாக பாதியில் படிப்பை விட்டுவிட்டாளா? அவனுக்குள் கேள்விகள் எழ அவளிடமே கேட்கலாம் என அவளை நோக்கி சென்றான் அசோக்.

அவன் தங்களை நோக்கி வருவதை கண்ட தமிழ்செல்வி புன்னகைத்தாள். அவளிடம் வந்தவன் "பாட்டி எங்க?" எனவும் "அவங்க ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க" என்று பதில் சொன்னவள் "என்ன இது?" என்றாள் அவனின் கையில் இருந்த புத்தகங்களை பார்த்து. "இந்தா தமிழ் உனக்காகத்தான் எடுத்துட்டு வந்தேன்" என கையில் இருந்த புத்தகங்களை அவளிடம் நீட்டியவன் அவள் புத்தகத்தை ஆர்வமுடன் புரட்டுவதை பார்த்தான். இத்தனை ஆர்வம் உள்ளவள் அதை தொடராமல் ஏன் இந்த வேலையை செய்யவேண்டும் என்ற கேள்வி குடைய, கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தை ஒரத்தள்ளி வைத்து விட்டு "தமிழ் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..."என மெதுவாக அவன் பேச்சை ஆரம்பிக்கவும் ராம் வரவும் சரியாக இருந்தது. பாட்டி இல்லாமல் மறுபடியும் அசோக்குடன் பேசுவதை கண்டவன் எரிச்சல் வந்தாலும் முகத்தில் அதை எதுவும் காட்டாமல் அவர்களிடம் வந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.