(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“டேய் காமேஷ்... சின்ன பொண்ணுடா... விடேன்... எதுக்கு சண்டைக்கு போற... மைத்தும்மா நீ போய் அங்க உக்கார்ந்துண்டு பாரு....”

“ரகுண்ணா சும்மா அவளுக்கு சப்போர்ட் பண்ணாத... ஓவரா பேசறா... வந்து போடட்டும்...”

“ரகுண்ணா நீ நகரு... இன்னைக்கு நான் போடற போடுல அவன் முதல் பந்துலேயே அவுட் ஆகப்போறான் பாரு...”, வீராவேசமாக பேசியபடியே பந்து வீச ஆயத்தமானாள்...

முதலில் போட்ட இரண்டு மூன்று பந்துகளை காமேஷ் தூக்கி அடித்து சிக்ஸருக்கு அனுப்பினான்... பத்ரி அவளை பார்த்து முறைத்த முறைப்பில் இருக்கும் கடவுள்களை எல்லாம் வேண்டியபடியே நான்காவது பந்தை போட அது சற்று வலது புறத்தில் பிட்ச் ஆகி இடது புறத்தில் திரும்பியது... சரியாக கணிக்க முடியாத காமேஷ் பந்தை தவற விட, பந்து ஸ்டம்ப்பில் பட்டு, வைத்திருந்த பெய்ல்ஸ் குச்சி எகிறியது... சற்று நேரம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை... அனைவரும் எதிர்பார்த்தது அந்த பந்து வலது பக்கத்தில் வைட் பாலாக போகுமென்று... இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை ...

சிறிது நேர அமைத்திக்கு பின்,” ஹே காமேஷ் அவுட்... அவுட்.... நான் அவுட்டாக்கிட்டேன்...”, மைத்தி கத்தியபின்பே அனைவரும் இவ்வுலகிற்கு வந்தார்கள்...

“மைத்திக்குட்டி சூப்பர்டி... செம்ம பால்.... கலக்கிட்ட போ... எப்படி இப்படி போட்ட...”

“அது ரகுண்ணா, பாட்டி முறுக்கு சுத்தும்போது விரலை ஒரு மாதிரி திருப்பி திருப்பி பண்ணுவாளே... அதே மாதிரி ட்ரை பண்ணினேன்... அவுட் ஆகிட்டான்....”

“சூப்பர்  போ... பாட்டிக்குத்தான் நீ தேங்க்ஸ் சொல்லணும்...”, ரகு பாராட்ட... மைத்தியை சற்று நேரத்திற்கு கையில் பிடிக்க முடியவில்லை... காமேஷ் அவளை முறைத்தபடியே பேட்டை அடுத்து ஆடுபவனிடம் கொடுத்தான்... அடுத்த இரண்டு  பந்துகளையும் மைத்தி அதே முறையில் போட அவர்களால் அந்த பந்தை தொட முடியாமல் போனது... சற்றே வேகத்துடன் வீசிய பந்தாகையால் ஸ்டம்ப்பிற்கு மேலாக சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார்கள்....

ரகுவும், பத்ரியும் அவளின் பந்து வீசும் திறனை பாராட்டி தள்ள... அடுத்த வார இறுதியில் பத்ரியுடன் அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க சென்ற மைத்தி பத்ரியின் நண்பர்களை மஸ்கா அடித்து பந்து வீச ஆயத்தமானாள்...

இந்த முறை பத்ரி விளையாட சென்றது சாந்தோம் பீச் அருகில்.... பெரிய இடமாக இருந்ததால் இவர்கள் டீம் விளையாடவும் சற்று அதிக இடம் கிடைத்தது...

“மைத்தி அடுத்த வாரம் எங்களுக்கு மேட்ச் இருக்குடா... நாங்க ப்ராக்டிஸ் பண்ணனும்.... அதனால இன்னைக்கு ஒரு நாள் நாங்க விளையாடறத மட்டும் பாரு... மேட்ச் முடிஞ்சப்பறம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.