(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 03 - ஜெய்

பீட்டர் பந்தை போட மைத்தியும் எப்படியும் அடித்து விடலாம் என்று ஆட ஆரம்பித்தாள்... அவளால் ஒரு பந்தை கூட தொட முடியவில்லை...

“மைத்தி பாலை சரியா பார்த்து அடி... உன்னோட கவனம் வர்ற பந்துல இருக்கணும்...”

“பீட்டர் அண்ணா, நான் கவனமாத்தான் இருக்கேன்... நீதான் ரொம்ப வேகமா போடற... மெதுவா போடு... அப்பறம் எப்படி சிக்ஸ் அடிக்கறேன்னு மட்டும் பாரு...”

“எது வேகமா... இதை விட மெதுவா போடறதுக்கு நான் பந்தை உருட்டி விடலாம்...”

இருவரும் வாக்கு வாதங்களுடன் ஆட... வெற்றிகரமாக பீட்டர் ஆறு பந்தை போட்டுவிட்டான்... நாயகியால் ஒரு பந்தை மட்டுமே தொட முடிந்தது... அதுவும் டொக்கு... முகத்தை தொங்க போட்டுக்கொண்டே மைத்தி வர பத்ரியும், அவன் நண்பர்களும் அவளை தாஜா செய்து அடுத்த வாரம் அவர்கள் பீச்சில் விளையாடும்போது அவளை கூட்டிக் கொண்டு போவதாக கூறி  சகஜ நிலைக்குத் திருப்பினர்...

வெற்றிகரமாக முதல் நாள் ஆட்டத்தை முடித்து பத்ரி, மைத்தி, மாது வீடு திரும்பினர்... இரவு உணவு முடிந்து மைத்தி பாட்டியுடன் உறங்க செல்ல மாதுவும் அவன் பெற்றோரும் கூடத்தில் படுக்க ஆயத்தம் ஆகினர்....

மைத்தியின் பாட்டி தனியாக ஒரு அறையில் வசிக்கிறார்... அவரின் ஜீவனத்திற்கு அக்கம் பக்க பெண்களுக்கு தைத்துக் கொடுக்கிறார்... ஷ்யாமளா எவ்வளவோ சொல்லியும் அவர் இந்த வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை... தனக்கு தேவையானதை தானே செய்து கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக  இருக்கிறார்...

அதே போல் அதிகாலையில் கோவிலுக்கு செல்வதைத் தவிர வேறு எங்கும் வெளியில் செல்லமாட்டார்... தைக்கும் வேலை மட்டுமே காமாட்சி பாட்டியுடையுது... தைக்க கொடுக்க வரும் பெண்களுடன் பேசுவது, தைத்த துணியை அவர்களிடம் கொடுப்பது அனைத்துமே ஷ்யாமளாதான்... ஷ்யாமளா கேட்டாலும், ‘நான் இப்படி இருக்கறதுனால நிறைய பேர் என்னை பார்க்க விருப்பப்பட மாட்டா ஷ்யாமளா.... மத்தவாளுக்கு எப்பவும் தர்ம சங்கடம் கொடுக்கக் கூடாது’, என்று கூறிவிடுவார்...  தனக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தேவையான பணம் தவிர மற்றதை அப்படியே தான தருமத்திற்கு கொடுத்து விட சொல்லிவிடுவார்...

அவரின் அறைக்கு சென்று இருவரும் படுக்க ஆயத்தமானார்கள் ...

“கோந்தை.... இன்னைக்கு டெஸ்ட் நன்னா எழுதினியாடி....”

“அது சும்மா கிளாஸ் டெஸ்ட்தான் பாட்டி... நன்னாத்தான் பண்ணி இருக்கேன்....”

“எதுவா இருந்தாலும் நம்மளோட நூறு சதவிகித உழைப்பு இருக்கணும்டி கோந்தே.... அப்பறம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.