(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

இன்னைக்கு பத்ரி விளையாடினதை பாக்க போனியே... பொழுது நன்னா போச்சா நோக்கு...”

“நான் என்னலாமோ கற்பனை பண்ணிண்டு போனேன் பாட்டி... அங்க போனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லை... அந்த கிரௌண்ட்ல ஏகப்பட்ட பேர் விளையாடறா... யார் எந்த டீம்னே தெரியலை... கொஞ்ச நேரம் பீல்ட் பண்ணினேன்... அப்பறம் கடைசியா ஆத்துக்கு கிளம்பறதுக்கு முன்னாடி பீட்டர் அண்ணா கொஞ்ச நேரம் என்னை பேட் பிடிச்சு ஆட விட்டா... ஆனா எனக்குத்தான் அடிக்க வரவே இல்லை பாட்டி... தடாவோ தடவுன்னு தடவி கடைசியா ஒரு பந்தை டொக்கு வச்சேன்....”, மைத்தி கூற காமாட்சி பாட்டிக்கு சிரிப்பு வந்தது...

“இன்னைக்குதானேடி கோந்தே முதல் வாட்டியா ஆடி இருக்க... அதான் அப்படி... போக போக நன்னா விளையாடுவ...”

“பாட்டி நான் ஒண்ணு கேப்பேன்.... நீ கோச்சுக்க மாட்டியே...”

“கண்டிப்பா மாட்டேன்.... கேளுடி கோந்தே...”

“நீ ஏன் பாட்டி மத்தவா மாறி  இருக்க மாட்டேங்கற... எப்பவும் மொட்டை அடிச்சுண்டு, ஒரே கலர் புடவை கட்டிண்டு ஜாக்கெட் கூட போட்டுக்க மாட்டேங்கற....”

 

“இது நான் எடுத்துண்ட கோலம்டா கண்ணா...”

“போ  பாட்டி... என்னோட பிரிண்ட்ஸ் எல்லாம் மொட்டை பாட்டின்னு உன்னை கிண்டல் பண்றா தெரியுமா....”

“கிண்டல் பண்றவா எல்லாத்துக்கும்தான் பண்ணுவா... அவாளுக்கு பார்த்துண்டு நம்ம வாழ்க்கையை வாழ கூடாதுடா... நாம நமக்காக வாழனும்... இது நான் எனக்காக, என் முழு மனசோட சந்தோஷமா ஏத்துண்ட வாழ்க்கை....”

“இது என்ன பாட்டி சந்தோஷம்... இந்த ஒரே ரூம்ல தனியா சமைச்சு சாப்டுண்டு, ரெண்டே புடைவையை  மாத்தி மாத்தி  கட்டிண்டு, கோவிலைத் தவிர எங்கயும் போகாம.. இதுதான் ரசிச்சு வாழறதா பாட்டி.... நோக்கு வர்ற பணத்தை கூட அம்மாட்ட குடுத்து கஷ்டப்படற குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க சொல்ற...”

“சந்தோஷங்கறது மனுஷாளுக்கு மனுஷா வேறு படும்டி கண்ணம்மா... சில பேருக்கு பணம்தான் சந்தோஷம் தரும்... சிலருக்கு குடும்பம்.... இன்னும் சில பேருக்கு படாடோபமான வாழ்க்கை ... நேக்கு சந்தோஷம் இதுல... இது ஒரு தவ வாழ்க்கைடா கண்ணா... புருஷா சன்யாசியா போகணும்ன்னா, போட்டுண்டு இருக்கற சட்டையை கழட்டிட்டு காவியைக் கட்டிண்டு போயிண்டே இருக்கலாம்... ஆனா பொம்மனாட்டியால அது முடியுமோ.... அவாளுக்கு சம்சாரத்தை விட்டு சன்யாசங்கறது கொஞ்சம் கஷ்டமான  காரியம் ... அப்போ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.