(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

சம்சாரத்துலையே சன்யாசியா எப்படி இருக்க முடியும்ன்னு யோசிச்சு எற்படுத்திண்டதுதான் இந்த கோலம்.... மத்தவா எப்படின்னு தெரியலை... ஆனால் நான் எடுத்துண்டது அப்படி யோசிச்சுதான்.... தேவைக்கு ரெண்டு புடவை.... ஒரு கைப்பிடி அரிசி சாதம்... அவ்வளவுதான்...”

“ஆனா எங்களுக்கு உன்னை பார்க்கும்போது கஷ்டமா இருக்கே பாட்டி... நாங்க வெளில போறச்ச எங்கயும் வர மாட்டேங்கற...  ரங்கநாதன் தெருவுக்கு போகும்போதெல்லாம் உன்னை கூப்பிடறோம்... ஒரு வாட்டி வந்திருக்கியா... எத்தனை  பெரிய பெரிய கடை தெரியுமா... ஜே ஜேன்னு கூட்டமா ஜாலியா இருக்கும்...”

“இங்க மயிலாப்பூர்ல இல்லாத கடையாடி... இங்கயே போகலை... நேக்கு அதெல்லாம் பார்க்கணும்ன்னு ஆசை இருந்தாத்தானே....”

“சரி அதை விடு... இன்னைக்கு அம்மா பிஸிபேளா பண்ணினா... எத்தனை நன்னா இருந்தது தெரியுமா.... உன்னை விட்டுட்டு சாப்பிடறோமேன்னு எங்க எல்லாருக்கும் கஷ்டமா  போச்சு....”

“கஷ்டமே படாதேள்டி  கோந்தே... நேக்கு இதுல எல்லாம் ஆசையே இல்லை... தவ வாழ்க்கைன்னா என்னடா.... காட்டுல என்ன கிடைக்கறதோ அதை சாப்பிட்டுண்டு பகவானை முழு நேரமும் தொழுந்துண்டே உயிர் வாழறது...  அதையே காட்டுக்கு பதிலா, ஆத்துல இருந்துண்டே நான் பண்றேன்...”

“என்னமோ போ பாட்டி நேக்கு ஒண்ணும் புரியலை... ஆனா உன்னோட கும்மட்டி அடுப்புல வெண்கல பானைல பண்ற அரிசி உப்புமாவை அடிச்சுக்க முடியாது... அந்த ருசி வேற எதுலயும் வராது... உன் தவ வாழ்க்கைல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் கும்மட்டி அடுப்பு சமையல்தான்...”

ஹாஹாஹா நாளைக்கு சாயங்காலம் நோக்கு  பண்ணி வைக்கறேன்... ஸ்கூல்லேர்ந்து வந்த உடனே சாப்பிடு...”, இவ்வாறு பல கதைகள் பேசியபடியே  இருவரும் உறக்கத்திற்கு சென்றனர்...

அடுத்த நாள் முதல் தோட்டத்திற்கு ரெகுலராக படையெடுக்க ஆரம்பித்தாள் மைத்தி... அங்கு விளையாடுபவர்களை கவனத்துடன் பார்க்க ஆரம்பித்தாள்....  அவளின் மாமா பிள்ளைகள் விளையாடும்போது  மட்டும் எப்படியோ கெஞ்சி கூத்தாடி நடுநடுவில் இரண்டு மூன்று பந்துகள் பேட் செய்து விடுவாள்... இன்னும் அதே டொக் வைக்கும் நிலைதான்.... மைத்தி அதற்கு சொல்லும் சாக்கு யாருக்கும் சரியாக பந்து வீச வரவில்லை என்பதே... ஒரு நாள் கடுப்பான அவளின் இரண்டாவது மாமா பையன் காமேஷ், ‘பேசறது எல்லாருக்கும் ஈஸி,... நீ போட்டாத்தான் உனக்கு தெரியும்...’, என்று சண்டைக்கு போக... நம் நாயகி கோவம் வந்து பந்து போட வந்து விட்டாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.