(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

உனக்கு சான்ஸ் தரோம்...”

“ப்ளீஸ் பீட்டர் அண்ணா... நான் நன்னா பால் போடுவேன்... காமேஷே நான் போட்ட பாலை அடிக்க தடவினான் தெரியுமா... அவனை நான்தான் அவுட் பண்ணினேன்...”

“ஆமாம் காமேஷ் பெரிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அவனை இவ அவுட் ஆக்கிட்டா... ரொம்ப பெருமைதான்....”

“சீனுண்ணா ரொம்ப கிண்டல் பண்ணாத... நீ இது வரைக்கும் காமேஷை அவுட் பண்ணி இருக்கியா... இல்லைல்ல ஸோ வாயை மூடு...”

“அடியேய் நான் அவனோட விளையாடினதே இல்லை... அப்பறம் எப்படி அவுட் பண்ண முடியும்....”

“அதெல்லாம் தெரியாது... நீ அவுட் ஆக்கல... ஆனா நான் அவுட் ஆக்கிட்டேன்... ஸோ நான்தான் பெஸ்ட் போலர்....”, மைத்தி சொல்ல அவள் சொன்ன லாஜிக்கில் சீனு வாயடைத்து போய்விட்டான்...

“டேய் பத்ரி... உங்க வீட்டு குள்ள வாத்து பொழைச்சுக்கும்டா என்னமா பேசுறா... நம்ம சீனுவே பதில் சொல்ல முடியாம திணர்றான் பாரு....”, பீட்டர் சிரித்தபடியே சீனுவை பார்த்து கூற, மைத்தி இதில் குஷி ஆகி இன்னும் மஸ்கா அடிக்க ஆரம்பித்தாள்...

“சரி மைத்திம்மா... இப்போ கொஞ்ச நேரம் பீல்ட் பண்ணு... கிளம்பறதுக்கு முன்னாடி   அன்னிக்கு மாதிரியே ஒரு ஓவர் சான்ஸ் தரேன்... பால் போடு... சரியா...”,பீட்டர் சொல்ல, கிடைத்தவரை லாபம் என்று தலையாட்டினாள் மைத்தி... பத்ரிக்கு காலில் லேசாக சுளுக்கு ஏற்பட அவனுக்கு பதிலாக பீல்ட் செய்ய ஆரம்பித்தாள் மைத்தி....

ஏற்கனவே இவர்கள் விளையாடும்பொழுது பந்து பொறுக்கிய அனுபவம் இருந்ததால் மிக நன்றாகவே பந்தை தடுத்தாள்....  இரண்டு, மூன்று முறை விழுந்து எழுந்து கேட்ச் வேறு மிக சரியாக பிடித்தாள்.... சுற்றி விளையாடியவர்களே இவளின் துடிப்பான பந்து தடுக்கும் முறையை ஆர்வத்துடன் பார்த்தனர்... தூரத்தில் அமர்ந்திருந்த ஒருவரின் கண்கள் வந்ததில் இருந்து இவளையே கவனித்துக் கொண்டிருந்தது...

விளையாடி முடித்து சொன்னது போலவே பீட்டர் மைத்திக்கு பந்து போடும் வாய்ப்பை கொடுக்க, அவளை பார்த்து சிரித்தபடியே சீனு மட்டையுடன் பந்தை அடிக்க வந்தான்... முதல் இரண்டு பந்துகளை அவனால் தொட முடியவில்லை... மூன்றாவதாக சுழன்று வந்த பந்து எந்த பக்கம் செல்லப்போகிறது என்று கணிக்க முடியாமல் சீனு திண்டாட அது நேராக சென்று ஸ்டாம்ப்பில் மோதியது...

அனைவரும் கைத்தட்டி மைத்தியைப் பாராட்ட... தூரத்தில் அமர்ந்திருந்த உருவம் இவர்களை நோக்கி வந்தது.....  

தொடரும்

Next episode will be published on 24th June. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.