“அதெல்லாம் சும்மா பாட்டி... பாரு நம்மாத்துலையே பசங்கள்லாம் சேர்ந்தே இருக்கா... பொண்கள்தான் மாசா மாசாம் இப்படி தனியா வந்து கஷ்டப்படறோம்.... ஏன் எல்லாரோடையும் சேர்ந்து இருந்தா என்ன ஆகும்...”
“தனியா வச்சிருக்கறது பொண்களோட நல்லதுக்குத்தாண்டி.... இதுதான் நோக்கு முதல் வாட்டி... அதனால அத்தனை கஷ்டம் தெரியலை... நிறைய பேருக்கு வயத்த வலி, கால வலின்னு துடிச்சு போய்டுவா... செத்த நேரம் கால நீட்டி படுத்தா போறும்ன்னு இருக்கும்... இந்த நேரம் நன்னா சத்துள்ளதா சாப்ட்டு ரெஸ்ட் எடுக்கணும்டி கோந்தே... ”
“ஆத்துலையே நான் தனியா படுத்துண்டா யார் பாட்டி கேக்கப்போறா...”
“எத்தனை நேரம் படுக்க முடியும் சொல்லு... ஆத்துக்கு வரவா, போறவான்னு இருப்பா... இல்லையா கீழேர்ந்து உன் மாமா பிள்ளைகள் வருவா... அப்பறம் எங்கேர்ந்து ரெஸ்ட் எடுக்கறது... பாத்ரூம்க்கு அடிக்கடி போறா மாறி இருக்கும்... அடிக்கடி துணி மாத்திக்கணும் ... மாத்தி வச்சுண்ட துணியை யாருக்கும் தெரியாம தோய்ச்சு காய வைக்கணும்... இதெல்லாம் தனியா இருந்தா சங்கோஜம் இல்லாம பண்ணலாம்...”
(மக்களே கதை எண்பதின் காலகட்டம்... அப்பொழுது நாப்கின்கள் இருந்தாலும் மாதவிடாய்க்கு துணி பயன்படுத்தியவர்களே அதிகம்...)
“உன்னோட அம்மாவையே எடுத்துக்கோயேன்... காலம்பற நாலு மணிக்கு எழுந்துக்கறா... ராத்திரி படுக்கற வரைக்கும் ஓய்வே இல்லாத வேலை... அவளுக்கு ரெஸ்ட்டுன்னு கிடைக்கறதே அந்த மூணு நாள்தான் தனியா இருந்தா அவப்பாட்டுக்கு நாள்முழுக்க படுத்துண்டு ரெஸ்ட் எடுக்கலாம்... இதே சேர்ந்து இருந்தா முடியுமோ...”
“எல்லாம் சரிதான் பாட்டி... ஆனா தனியா இருக்க நேக்கு ரொம்ப பயமா இருக்கே...”
“மைத்தி குட்டிய அப்படி நாங்க தனியா விட்டுடுவோமா... உன் மாமா பசங்கள் வர்ற வரை நான் துணை இருக்கேன்... அவா சாயங்காலம் வந்துட்டா உனக்கு பொழுது போய்டும்...”
ஒருவழியாக அரைகுறை சமாதானம் ஆன மைத்தி இருந்த அலுப்பில் ஷ்யாமளா கொடுத்த காப்பியை அருந்திவிட்டு உறங்கிவிட்டாள்...
“இவளை வச்சுண்டு இந்த மூணு நாளை எப்படி கடத்தப் போறேனோ தெரியலைமா... ஏற்கனவே பூஞ்சை உடம்பு... தனியா இருக்க பயந்துண்டு உடம்புக்கு வேற எதையும் இழுத்து விட்டுக்காம இருக்கணும்...”
“சின்னக் குழந்தைதானேடி ஷ்யாமளா... ரெண்டு வாட்டி ஆனா தானா பழக்கம் வந்துடும்.... இந்த வாட்டி துணைக்கு கல்யாணியை படுத்துக்க சொல்றேன்... திரண்டுகுளி எப்படி