(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

பண்ணனும்ன்னு உன் மாமியாரண்ட கேட்டுண்டயா.... எல்லாரையும் அழைச்சு பண்ண சொன்னாளா...”

“இல்லைமா ரொம்ப பெரிசா பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டா... நிறைய பேர் வந்தா மைத்திக்கு கஷ்டமா இருக்கும்... அதனால ஆத்து மட்டுக்கும் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டா... நீ அத்தைக்கும், சித்திக்கும் சொல்லிடு.... வேற ரொம்ப கூட்டம் சேர்க்க வேண்டாம்...”

“அதுவும் சரிதான்... சரி நான் சாயங்காலமா போய் அவாக்கிட்ட சொல்லிட்டு அப்படியே குழந்தைக்கு புது துணி எடுத்துண்டு வரேன்... சீர் பட்சணம் வேற பண்ணனும்... நிறைய வேலை கிடக்கு...”, கற்பகத்தின் பெரிய மாட்டுப்பெண் வந்து மைத்தியுடன் இருப்பதாக கூற, ஷ்யாமளாவும், கற்பகமும் அடுத்த வேலைகளை கவனிக்க சென்றனர்....

மைத்திக்கு தனியாக இருப்பதும், கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதும் கஷ்டமாக இருந்தாலும் வேளாவேளைக்கு அவளுக்கு நடக்கும் ராஜ உபஜாரம் பிடித்தே இருந்தது... தினம் காலையும், மாலையும் வித வித தின்பண்டங்கள் கூடவே அரட்டை என்று பொழுது நன்றாகவே போனது... இரண்டு மாமாவின் பெண்களும் தாங்கள் மைத்தியுடனே இருப்பதாக சொல்ல இன்னும் அவளுக்கு சந்தோஷமாகியது...

ஞாயிறன்று தலைக்கு தண்ணீர் விட்டு வீட்டளவில் சிறிய விழா நடத்தி அவளை அழைத்துக் கொண்டனர்... ஏகப்பட்ட பரிசுப் பொருள் வந்ததால் மைத்தி சந்தோஷத்தின் எல்லையில் இருந்தாள்....

மாமாக்கள், அத்தைகள், நெருங்கிய சொந்தம் அனைவரும் பரிசு கொடுத்து வாழ்த்தி சென்றதும் அவளின் மாமா பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து ஒரு பரிசுப்பொட்டலத்துடன் வந்தனர்...

“ரகுண்ணா என்னதிது... எனக்கா gift?”

“உனக்கேதாண்டா மைத்தி... எங்க எல்லாருக்கும் நேரா பிரி பாப்போம்...”, ரகு சொல்ல மைத்தி பொறுமையாக பிரிக்க ஆரம்பித்தாள்....

“ரகுண்ணா இன்ஸ்டிடுயூ ட்ல கொடுக்கற காசுல சேர்த்து வச்சு இந்த gift வாங்கினா மைத்தி....”, கல்யாணி சொல்ல மைத்தி அவனை நன்றியுடன் பார்த்தவாறே பிரித்தாள்...

பிரித்தவுடன் வந்த பொருளை பார்த்ததும்  அத்தனை சந்தோஷம் மைத்தி  கண்களில்... அதில் இருந்தது கார்க் பால்... சற்று விலை கூடியது... மழமழவென்று சிவப்பு வண்ணத்தில் அத்தனை அழகாக இருந்தது...  படத்தில் மட்டுமே பார்த்த ஒன்று தன் கைகளில் தவழுவதை அவளால் நம்பவே முடியவில்லை... அத்தனை நாள் அவள் விளையாடியது ரப்பர் பந்து வைத்தே , முதல் முறையாக கார்க் பந்தை தொட்டவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.