(Reading time: 9 - 18 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

தொடர்கதை - வாழ்வே மாயம்! - 12 - ரவை

காந்தி முதியோர் இல்லத்தில், திடீரென களை கட்டியது!

"போலீஸ் கமிஷனர் மனைவி வந்திருக்காங்க, அவங்க அக்கா மூணு பேரும் கூட வந்திருக்காங்க! நம்ம தர்மன் - பிரபா தான் அவங்க அப்பா,அம்மாவாம்!"

முதியோர்களின் மத்தியில், தீ போல் பரவியது, இந்தச் செய்தி!

அவர்கள் ஒருங்கே கூடியதும், வத்சலா அவர்களிடம் பேசினாள்:

" இன்னிக்கி எங்க அம்மாவுக்கு பிறந்த நாள்! எல்லாரும் இனிப்பு எடுத்துக்குங்க! இன்று மதிய உணவுக்கு நாங்கள் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தயவுசெய்து எல்லாரும் கலந்துக்கணும்!

ஒரு சந்தோஷமான அறிவிப்பு! நாங்க சகோதரிகள் நால்வருமாக சேர்ந்து, காந்தி முதியோர் இல்லத்துக்கு நாற்பது லட்ச ரூபாய் நன்கொடை வழங்குகிறோம்!"

தர்மன் - பிரபா ஜோடி ரொம்ப பெருமையுடன் சிரித்து மகிழ்ந்தனர்!

காப்பாளர் எழுந்து, அறிவித்தார்:

இன்று நம்ம திருமதி பிரபா தர்மன் பிறந்த நாளையொட்டி, ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு, அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்க, ஏற்பாடு செய்திருக்காங்க!

ஆமாம், நம்மிடையே இன்று மாலை ஐந்து மணிக்கு ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் கிருபானந்தர் பேருறை ஆற்றுவார். எல்லோரும் அதைக் கேட்டு பயனடையவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்...."

பிற்பகல் விருந்தை முதியோர் ருசித்து சாப்பிட்டு அரட்டை அடித்தனர்.

"சொல்றேனேன்னு கோவிச்சிக்கப்படாது! இன்னிக்கி நீங்க நாலு பெண்களும் இங்கே வந்து, உங்கம்மாவோட பிறந்தநாளை கொண்டாடறது, சந்தோஷமாகத்தான் இருக்கு!

ஆனா, கூடவே ஒரு சந்தேகமும் வருது, பாவம்! இன்னிக்கி ஒருநாளாவது, பெற்ற தாயை உங்க வீட்டுக்கே அழைத்துப்போய் அவங்க பேரன் பேத்திகளோட சந்தோஷமா பிறந்தநாளை கொண்டாடலாமே? தப்பா இருந்தா, மன்னிச்சிக்குங்க!"

உடனே பிரபா குறுக்கிட்டு, " கற்பகம்! இந்த நேரத்திலே பேசற பேச்சா இது? குழந்தைங்க ஏதோ ஆசைப்பட்டு, இனிப்பு வழங்கி, விருந்து வைத்து, அமர்க்களமா கொண்டாடறாங்க! அதைக் கெடுக்கறாப்பலே, அபத்தமா பேசாதே, வாயை மூடு!"

" பிரபா! என் வாயை மூடலாம், ஊர்வாயை மூடமுடியாதே! அதெல்லாம் உன் காதிலே விழலே, என் காதிலே விழறபோது, பத்து வருஷமா உங்களோட பழகறதனாலே, மனசுக்கு வேதனையா இருக்கு!"

"கற்பகம் பேசறதைக் கேட்டு கோவிச்சுக்காதே, பிரபா! எனக்கும் ஊர் பேச்சு காதுல விழறபோது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.