(Reading time: 9 - 18 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

காரணத்தின் காரணம் மாறுவது நமது மனநிலை மாற ஒரு காரணம்!

இப்படி மாறக்கூடிய விஷயந்தான், சந்தோஷமும் துயரமும்! ஏன்னா, நம் மனது மாறுது! மாறிக்கொண்டே இருப்பதுதான் மனம்!

அதனால்தான், பெரியவங்க சொல்லியிருக்காங்க, மனிதன் மனதுக்கு அடிமையாகாமல், மனதை தன் ஆளுமைக்குள் கட்டுப்படுத்தவேண்டும்!

சொல்வது சுலபம், செய்வது கடினம்!

எப்படி கட்டுப்படுத்துவது?

நிறையபேர், மனதுதான் நாமென்று நினைத்து வாழறாங்க! நம் பெற்றோர், நம் குடும்பம், நம் வீடு, நம் உடல், என்பதுபோல நாம் வேறு, நம்மனம் வேறு!

அப்படின்னா, நாம் யாரு?

யோசிப்போமா? உடலா, அறிவா, உடல் உறுப்புகளா, இவை எதுவுமில்லே!

எப்படி சொல்றேன்னு கேளுங்க! நாம ராத்திரி படுக்கிறபோது, முதல் ஒருமணி நேரம் தூக்கம் வராம, புரளுவோம்! அப்புறமா தூங்கறபோது கனவு காண்போம், அந்தக் கனவிலே என்ன நடக்கறதுங்கறது நமக்கு தெரியும், ஆனா, கனவு முடிந்து, காலையிலே எழுகிறவரையில், என்ன நடக்குறதுன்னு தெரியாமலே தூங்கி விழித்தவுடன், கடிகாரத்தை பார்த்து, 'ஆ! நேரம் போனதே தெரியாம தூங்கிட்டேனே'ன்னு அலறிண்டு எழுந்திருக்கீங்களே, அப்படி அறியாம தூங்கறவனை அறிந்திருப்பவன்தான், நாம்!

ஒரு நோயாளி, வியாதி முற்றி, மூளை, உடல், ரத்த ஓட்டம்,எதுவும் இயங்காம, கோமாவிலே இருக்கிற ஒருத்தனை இறந்துவிட்டான்னு சொல்லுவோமா, கோமாவிலே இருக்கான்னுதானே சொல்வோம்!

ஏன்னா, மூளை செத்துப் போயிடுத்துன்னு 'பிரெயின் டெட்'னு சொன்னாலும், நபர் 'டெட்'ஆகலை, உயிரோட இருக்கார், மூச்சு இருக்கு!

அந்த மூச்சுதான் நீங்க!

உயிரோடிருக்கிறபோது, நாம தெருவிலே போனா, 'ராமன் போறான், பார்'னு சொல்றோம், அந்த ராமனுக்கே மூச்சு நின்னுபோய், சவமா நாலுபேர் தூக்கிண்டு போறபோது, 'ராமன் போறான்'னு சொன்னவங்களே 'சவத்தை தூக்கிண்டு போறாங்க!'ன்னு தானே, சொல்வாங்க!

சரி, நாம யாருன்னு தெரிஞ்சிக்க, சுலபமான வழிதான் தியானம்!

கண்களை மூடிண்டு, மனதை அங்கே இங்கே அலையவிடாமல், கட்டுப்படுத்தி, ஒரே விஷயத்திலே எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதுதான் தியானம்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.