(Reading time: 9 - 18 minutes)
Vazhve Maayam
Vazhve Maayam

அப்படி கட்டுப்படுத்தி, உண்மையான நாம், நம்மை வழிநடத்தும்போது, நாம் அமைதியாக இருப்போம். சலனமே இருக்காது.

பலர் தப்பா சந்தோஷமா இருக்க ஆசைப்படறாங்க! சந்தோஷம்னு தனியா ஒண்ணு கிடையாது, அதுக்கு இரு முனைகள்! ஒருமுனை மகிழ்ச்சின்னா, மறுமுனை துயரம்! ஒரே ஒரு முனையுள்ள கம்பு, கழி, இருக்கமுடியுமா?

எப்படி சந்தோஷமே துயரமாகுதுன்னு சொல்றேன்.

மாம்பழம் ரொம்ப பிடிக்கும். கொள்ளை ஆசையோட, முதல் பழம் சாப்பிடுவோம், இரண்டாவதும் அப்படியே!

ஆனா, மூணாவது, நாலாவது சாப்பிடறபோது, சந்தோஷம் குறையும், வயிற்றுவலி வரும். துன்பத்திலே முடியும், சரியா?

இன்பம், துன்பம் இரண்டுமே மனதின் விஷமத்தனம்!

ஒரே நிகழ்வை, நம் மனது, ஒரு சமயம் இன்பமாக பார்க்கும். பிறிதொரு சமயம், துன்பமாகப் பார்க்கும்.

உதாரணமா, நேற்றுவரை, பெற்றோர்களை உடன் வைத்துக்கொள்வதை துன்பமாக நினைக்கிற மனம்,

இன்று திடீர்னு அதே நிகழ்வு, பெற்றோர்களை உடன் வைத்துக்கொள்வது, இன்பமாக மாறி, ஓடிவந்து, இனிப்பு வழங்கி, விருந்து வைத்து, தங்களோடு அழைத்துப் போவாங்க!

( கூடியிருந்தோர் கைதட்டல்)

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லலே, எனக்கேன் வம்பு? பொதுவாக சொன்னேன்.

போக்கிரி மனம், துன்பமா நினைச்சதுக்கு ஒரு காரணம் சொல்லும், இன்பமா நினைக்கிறதுக்கும் காரணம் சொல்லும்.

அதனாலே, நாம் எப்போதும் கவனமாக இருந்து, உள்ளம், ஆன்மா, சொல்கிறபடி நடக்கணும்.

மனதுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு, அடிப்படையான வேறுபாடு, எதுன்னா, மனம் கடந்த காலத்திலேயும் எதிர்காலத்திலேயும் படர்ந்து

நம்மை சத்தியத்தை, கண்ணுக்குமுன் உள்ள நிதர்சனத்தை, மறைக்கும்.

உதாரணமா, ஒரு ரோஜா மலரை பார்க்கும்போது, மனம் அடித்த வினாடியே, இந்த மலருக்கு ரோஜான்னு பெயர், இது நம்ம தோட்டத்திலே நிறைய மலர்ந்தது, பல நிறங்களிலே மிளிர்ந்தன, என்றெல்லாம் கடந்தகால நினைவுகளுக்கும், அதே மூச்சிலேயே, இந்த ரோஜாவை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய், மனைவிக்கு தரணும், இந்த செடியின் விதையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.