(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இருக்கிறது. நான் இந்த ஹீட்டரை ஆன் செய்து விட்டு செல்கிறேன். நீங்கள் வெளியே வரவேண்டாம். எது வேண்டும் என்றாலும் எங்களிடம் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு அறையின்  ஹீட்டரை ஆன் செய்துவிட்டு கதவை சாத்தி விட்டு மச்சானை  காண சென்றான்.

ரஞ்சன் அவனுடைய அறையை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான்.

" அவங்கள்லாம் இல்லாதப்போ ஒழுங்கு படுத்தினால் தான் உண்டு. உன் பொண்ணு இருக்கையில் மொத்த பீரோவையும் கலைத்து  வைக்கிறாள்" என்று அவனிடம் சொல்லிக் கொண்டே அவனுடைய பீரோவை அடுக்க ஆரம்பித்தான்.

 "சரி நீ உன் வேலையை பாரு" என்று சொல்லி விட்டு வெளியே வந்தான்.

 அவனுக்கு அந்த இருள் கவிந்த ஆரம்பித்திருந்த சூழல் மிகவும் பிடித்திருந்தது வெளியே வராண்டாவில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 அங்கு தோட்டத்தில் தாத்தா ஒரு சிறிய பசுமை குடில் ஒன்றை அமைத்திருந்தார். மல்லிகை கொடிகளால் சூழப்பட்டு இருந்த அந்த குடில் அழகாக இருக்கும்அங்கிருந்து பார்த்தால் தொலை தூரத்தில் இருக்கும அருவி வெள்ளி கோடாக தெரியும்.

 ஒரு மழை  நேரத்தில் சூடாக காபியை குடித்துக் கொண்டு…  அந்த பசுமை குடிலில் அமர்ந்து விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் மழைச்சாரல்களை  ரசிக்க வேண்டும் என்றுஅவன் நிறைய முறை நினைத்ததுண்டு. அவனுக்கு இப்போது அது நினைவுக்கு வந்தது. உடனே சமையலறைக்கு சென்று காபி போட்டுக் கொண்டு ஒரு பெரிய கப்பில் எடுத்துக்கொண்டு வந்தான். அவன் வரும்பொழுதே சரியாக மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

விரைவாக அந்த பசுமைக் குடிலுக்குள் சென்றவன்… அங்கிருந்த சிமெண்ட பெஞ்சில்  காலை மடித்துப் போட்டு அமர்ந்தான்மழை தூறல்களை ரசித்தவாறு சூடான காபியை மெதுவாக அருந்தலானான்மனம் அமைதியடைய…  அந்த குளிரும்மண் வாசனையும்முகத்தில் தெரித்த மழை துளிகளும் மீராவை  நினைக்க வைத்தன.

இதே போன்ற ஒரு மழை நாளில் அவளை அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டங்கள் நிறைந்த  மூணாறுக்கு சென்று இருந்தான். அதுவும் மலைப்பகுதிதான். அவளுக்கு அந்த மாதிரி சூழல் மிகவும் பிடிக்கும்அங்கு செல்லும்போதே அவளுடைய பெயிண்டிங் செட்டையும் எடுத்துச் சென்றிருந்தாள்.

 அங்கு ஒரு எஸ்டேட் ரிசார்ட்டில் விருந்தினராகத் தங்கி இருந்தனர். ஒரு மதிய வேளை…  வெயிலின் மஞ்சள் தூரிகை  அந்த பச்சை வண்ண தேயிலை செடிகளின் மீது பரவி புது வண்ணங்களை தெறிக்க விட்டது. பங்களாவின் சிட்-அவுட்டில் அமர்ந்து அந்த இயற்கையை அழகாக மீரா படம் வரைந்து கொண்டிருந்தாள். ஒரு இண்டர் நேஷனல் போட்டிக்காக அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.