(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இருக்கற டீக்கடையிலகூட இந்த பாட்டை போடுவாங்க.. அங்க போய் கேளு…" என்று அவளும் கத்த ஆரமபித்தாள்.

அப்போது திடுதிடுவென ரஞ்சன் ஓடி வந்தான்.

"என்ன ஆச்சு இப்படி இரண்டு பேரும் சத்தம் போட்டு... சண்டை போட்டுட்டு இருக்கீங்க?. என்ன பிரச்சனை?." என்று பதட்டமாக கேட்டான்.

"அண்ணா நான் இந்த மழையில நனைஞ்சு கிட்ட பாடி கிட்டு இருந்தேன். அது என்னோட பழக்கம். திடீரென்று வந்து இவருக்காக நான் பாடுற மாதிரி நெனச்சுக்கிட்டு கத்திக்கிட்டு இருக்காரு. என்னன்னு கேளுங்க?. என்னோட இடத்துல நான் பாடுவேன்ஆடுவேன்குதிப்பேன்அதை இவர்  எப்படி குறை சொல்லலாம்?.  உங்க ஃபிரண்டுக்கு ஏதாவது லூசு பிடிச்சு இருக்கான்னு பாருங்கஎன்றாள்.

"லூசுன்னு சொன்னே…  பல்லை தட்டி கொடுத்து விடுவேன்... ஜாக்கிரதை!.  என் மேல எத்தனை தரம் கல்லெடுத்து வீசி இருக்க. நான் ஏதாவது உன்கிட்ட வந்து பேசி இருக்கேனா..?. சும்மா என்னுடன்  வம்படிச்சுக்கிட்டு இருக்கிற.. அதிலும்  இன்னைக்கு வெரி வொர்ஸ்ட்... என்னைய கோபப்படுத்திட்டசீண்டி இருக்கற.."

"கம் ஆன்ஏன் இப்படி விவரிச்சு பேசறீங்க. அன்னைக்கு நான் பழத்து மேல விட்ட கல் உங்க மேல பட்டுச்சுகல்பி மேல அடிச்சது உங்க பக்கத்துல வந்துடுச்சுநான் நிஜமாவே உங்க மேல அடிச்சிருந்தால் நின்னு பேசிகிட்டு இருக்க மாட்டீங்க. மண்டைல பத்து தையல் போட்டு ஹாஸ்பிட்டல்ல இருப்பீங்க."

சத்யன் பேச ஆரம்பிக்குமுன் அவனை தடுத்த ரஞ்சன்,

" போதும் சத்தியன் இத்துடன் நிறுத்தி விடு. அவர்கள் அவர்களுடைய இடத்தில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு என்ன பிரச்சனை?   வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கிறாய். வா என்னுடன்என்று சொல்லிவிட்டு, அவளை பார்த்து

" அம்மா மன்னித்துக்கொள். நீங்கள்  உங்களுடைய வேலையை பாருங்கள். இனி இது போல் நடக்காதுஎன்று சொல்லி  சத்யனுடைய கையை பிடித்து தரதரவென்று  இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் சத்யனிடம் விறுவிறுவென்று பிடித்துக் கொண்டான்.

" நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?.  அந்த பெண்ணிடம் ஏன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாய்…  நான் இது போல நீ யாரிடமும் பேசிப் பார்த்ததில்லை.. எத்தனை பேர் உன்னை பேசி இருக்கிறார்கள்... எத்தனை பெண்கள் உன்னை சுற்றி சுற்றி வந்து இருக்கிறார்கள்... அப்போதெல்லாம் பொறுமையாக இருந்தாய்ஏன் உன்னுடைய அத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.