(Reading time: 11 - 22 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

என்று பாடும் குரல் கேட்டது.

ஓஹ்… அந்த பாடல்தான்அவனுக்கு நினைவு வந்து விட்டது. ஆனால் யார் அதை பாடுவதுமீராவின் குரல்போலவே இருக்கிறதே

பதட்டமாக எழுந்து குரலை தொடர்ந்தான்.  பக்கத்து  வீட்டு தோட்டத்திலிருந்து கேட்கிறதேயாரதுகண்ணை சுருக்கி கூர்ந்து பார்த்தான். அதுஅதுரேச்சல் அல்லவாகாம்பவுண்ட் அருகே சென்றான்.

பெய்ந்து கொண்டிருந்த மழையில் ஒரு லே அவுட்போல அவள் தெளிவில்லாமல் தெரிந்தாள். அவனுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறாள். அவனுடைய உணர்வுகளை பாட்டு பாடி சீண்டுகிறாள்என்ற கோபம் படக்கென்று வந்தது

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே

அவள் அடுத்த வரியை பாடும் முன் அவள் முன் சண்டபிரசண்டமாக பிரசன்னம் ஆனான்.

"என்ன திமிர் உனக்கு… ?.  என்னுடைய இந்த பாட்டை பாடிக்கிட்டு எனக்கு முன்னாடி நிற்கிறாய்!.  உனக்கு என்னை வம்பிற்கு இழுக்காமல் பொழுதுபோகாதா.. இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் உனக்கு எப்படி தெரியும்" என்று திட்ட ஆரம்பித்தான்.

"ஏதோ சிறு பெண் விளையாட்டுத்தனமாக கல்லை வீசி கொண்டிருக்கிறாய் என்று நினைத்தால்.. நீ இப்பொழுது என்னுடைய எமோஷன்ஸ் கூட விளையாட ஆரம்பித்து விட்டாய்தட்ஸ் ஹை டைம்உனக்கும் எனக்கும் என்ன வரவு செலவு இருக்கிறது?.  பக்கத்து வீட்டில் இருப்பதால் என்ன வேணாலும் செய்து விடுவாயா?. உன்னுடைய இடம் எது என்பதை புரிந்துகொள். இனிமேல் என்னுடைய விஷயத்தில் தலையிட்டால் நான் மனுஷன் ஆகவே இருக்க மாட்டேன்என்று கத்தி குவித்தான்.

மழையில் நனைந்து கொண்டு ஆனந்தமாகப் பாடிக் கொண்டு இருந்த ரேச்சலுக்கு திடீரென்று சத்யன் அவள் முன் வந்து நின்று பேய்பிடித்தாற்போல் கத்த ஆரம்பிக்கவும் முதலில் பயந்து போனாள். பிறகு கோபம் அதிகமாகி விட்டது. அவளுக்கு இவன் யார் அவளை திட்டுவதற்கு என்று டென்ஷன் ஆனாள்.

"ஏய் நான் எதுக்கு உனக்காக பாடனும்?. எனக்கு அந்த பாட்டு பிடிக்கும் அதனால நான் பாடுவேன். நீ என்னை பொண்ணு பார்க்க வந்திருக்க பாருஅப்படியே பாடி உன்னை மயக்க  பார்க்கிறேன்…   ஹூ யூ  டு மீ?. ரொம்பவும் நினைப்போவிட்டால் அந்த பாட்டையே உனக்காகதான் எழுதினாங்கனு சொல்லுவியாகொஞ்சம் ஒவரா தெரியலபஸ் ஸ்டாண்டுல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.