(Reading time: 13 - 26 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கல்லூரியின் வாசலை நோக்கி நடந்தவாறு கேட்டாள் நித்யா.

"என்ன ஹெல்ப்??? சொல்லு முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்..."என்றான் ராம்.

"ராம் உங்களுக்கே தெரியும். நான் இப்போ பண்றது மேஜர் இன் பெஷன் டிசைனிங். உங்களுது க்ளோத்திங் இண்டஸ்ட்ரி. எனக்கு உங்க கம்பெனில இன்டெர்ன்ஷிப் பண்ணனும்" நித்யா கேட்க, "அவ்ளோ தானா??? அதுக்கு தான் ஹெல்ப் அப்படி இப்படினு சொன்னியா? சம்பளம் இல்லாமல் வேலை செய்ய ஒரு ஆளு கிடைக்கும் பொது நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்" என்று ராம் சிரிக்க அவனுடன் சேர்ந்து சிரித்தபடி காரில் ஏறினாள் நித்யா.

"தேங்க்ஸ் ராம். நான் கொஞ்சம் லேட்டா ஜான் பண்றதுனால என் பிரென்ட் மூலமா எப்படியோ ஒரு சீட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா அந்த ஆளு காலைல சீக்கிரம் வர சொன்னதால உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போயிடுச்சு...சாரி...தமிழ் எதுவும் தப்பா நெனைச்சுக்க மாட்டாங்க தான? நீங்க சொல்லிட்டு தான் வந்திருப்பீங்க...இல்லை ராம்" அவள் அவனின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்க, ராம்க்கு அவள் நேற்று இரவு கோபத்தில் படபடத்தது நினைவிற்கு வந்து புரை ஏறியது.

"ஐயோ ராம் என்னாச்சு???? இந்தாங்க தண்ணி" என அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவனிடம் நீட்டினாள் நித்யா.

அதை வாங்கி அருந்தியவனிடம் மீண்டும் கேட்டாள் நித்யா, "என்ன ராம் சொல்லிட்டு வந்திங்களானு கேட்டா அதுக்கு இப்படி முழிக்கிறிங்க?".

"ஹான்... சொல்லிட்டு தான் வந்தேன்...சொல்லிட்டு தான் வந்தேன்" அவனின் தடுமாற்றம் நித்யாவின் முகத்தில் வெளிச்சத்தை கொண்டு வந்தது. 

"பத்து மணி ஆச்சு... எங்கயோ போகட்டும்...ஆனா எனக்கு பிரேக் பாஸ்ட் வேணாம்னு சொல்லிட்டு போக வேண்டியது தான...சே...தமிழ், வெரி வெரி பேட். உனக்கு வர வர கொஞ்சம் கூட அறிவே இல்லாம போயிட்டு இருக்கு... அவங்க உன்கிட்ட சொல்லாம போயிருக்காங்க..நீ எதுக்கு அதுங்களுக்கு சேர்த்து சமைக்கணும்...மதியம் இதையே சூடு பண்ணி தின்னட்டும்" என தன்னை தானே திட்டி கொண்டவள்  எல்லாவற்றையும் எடுத்து ப்ரிட்ஜில் வைக்கவும் கார் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் தமிழ்செல்வி.

உள்ளே வந்த நித்யா கையில் இருந்த பார்சலை தமிழை நோக்கி நீட்டியவள், "இந்தா தமிழ், மெக்டொனால்ட்ஸ்ல இருந்து எனக்கு பிடிச்ச ஸ்பைசி பன்னீர் ரேப் சாப்பிட்டோம். நீ இதுக்கு முன்னாடி இதெல்லாம் சாப்ட்ருக்க மாட்டேன்னு நான் தான் உனக்காக ஒரு பார்ஸல் வந்திட்டு வந்தேன். இந்தா சாப்டு" எனவும் அவளை ஓங்கி அறையும் அளவுக்கு கோபம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.