(Reading time: 13 - 26 minutes)
Priyamaanavale
Priyamaanavale

வந்தது தமிழுக்கு. கஷ்டப்பட்டு அதை அடக்கியவள் முகத்தில் ஒரு புன்னகையுடன் நீட்டியிருந்த நித்யாவின் கையை மெல்ல இறக்கிவிட்டபடி சொன்னாள்.

"நீங்க டயட்ல இருக்கீங்க நித்யா. இந்த மாதிரி பிட்சா பர்கர் எல்லாம் ரொம்ப நல்லது. அதனாலா நீங்களே வெச்சிருந்து சாப்பிடுங்க... எனக்கு வேலை இருக்கு" என்று விட்டு வேகமாக வெளியே செல்ல, எதிரில் நின்றிருந்த ராமை நின்று ஒரு பார்வை பார்த்தவள் அவனை கடந்து சென்றாள்.

"பார்த்திங்களா ராம்...நான் எவ்ளோ அக்கறையா வாங்கிட்டு வந்தேன். ஆனா எப்படி பேசிட்டு போறா பாருங்க..." நித்யா ராமை கண்டதும் கொஞ்சலாக சினுங்க, "நித்து, இதெல்லாம் அவளுக்கு பிடிக்காது. நீயே சாப்பிடு..." என்றவன் "அப்பறம் நித்து இன்னொரு விஷயம்...நான், நீ, பரத் மூணு பெரும் சின்னவயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க...நீ என்னை பேரு  சொல்லி கூப்டறது எல்லாம் ஓகே. ஆனா தமிழை நீ மரியாதை இல்லாம  வா போனு பேசாத. பாட்டிக்கு பிடிக்காது" எனவும், நித்யாவின் மனதிற்குள் சுளீரென கோபம் சுழன்றடிக்க, அவள் மனம் அவளுக்கு அபாய மணியை ஒலித்தது. "நித்யா சுதாரித்து கொள்" என.

"ஐயோ என்ன ராம்...தமிழுக்கு என் வயசு தான இருக்கும். அதனால தான் ஜஸ்ட் பிரெண்ட்லியா பேசுனேன். என்னை பத்தி உங்களுக்கு தெறியாதா?" என்றாள் அவன் கைவிரலை பிடித்து கெஞ்சும் தோரணையில்.

"எனக்கு தெரியும் நித்து. ஆனா பாட்டிக்கு பிடிக்காது. உனக்கே தெரியும். அதனால தான் சொன்னேன்" என்றவன் அவனுடைய அறையை நோக்கி செல்ல யோசனையுடன் அமர்ந்தாள் நித்யா.

அவளுடைய யோசனையை கலைக்கும் படி ஒலித்தது அவளின் அலைபேசி. "அம்மா" என்ற பெயரை பார்த்தவள், அவருக்கு எப்படி தெரியும் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்.

"நித்து  எங்க இருக்க???" எடுத்ததும் கோபமாக ஒலித்தது அவளின் அம்மா மீனாட்சியின் குரல்.

"அம்மா கத்தாதீங்க. ஒரு நிமிஷம் நான் ரூம்ல போயி பேசறேன்" என்றவள் அவளின் அறைக்கு ஓடி கதவை அடைத்தாள்.

"சொல்லுங்க...." -நித்யா

"என்ன சொல்ல சொல்ற? நீ திரும்பி வந்ததை பத்தி எனக்கு ஒரு வார்த்தை சொன்னியா? அத்தை கால் பண்ணி கேக்கறாங்க...என் மானமே போச்சு...எதுக்கு நீ நேரா அவங்க வீட்டுக்கு போன? அதுக்கு பாதில திரும்பி வந்த???" மீனாட்சி குரல் கோபமாக ஒலிக்க, "எதுக்குன்னு தெரியாதா அம்மா?" என்ற நித்யாவின் கேள்வியில் ஸ்தம்பித்து போனார் மீனாட்சி.

"நித்தும்மா...." மீனாட்சி குரல் தாழ்ந்து ஒலித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.