(Reading time: 13 - 26 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இல்லைநும் சொல்லல...நான் இங்க வந்ததுல இருந்து ரெண்டு பேரும் அன்பா ஒரு வார்த்தை பேசிக்கல...பேசறது என்ன பார்த்துக்க கூட இல்லை...சம்திங் பிஷ்ஷி...நித்து...ஸ்டில் தேர் இஸ் எ ஹோப்....டோன்ட் கிவ் அப்..."தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

 

அறைக்குள் நுழைந்த ராம், அரை இருட்டாக இருக்கவும் அங்கிருந்த ஸ்விட்சை தட்ட அந்த அறை முழுதும் வெளிச்சம் பரவியது.  பார்வையை அந்த அறையில் சுழல விட்டான். நேரம் பதினொன்றை தாண்டியிருந்தது. தமிழ்செல்வி அறைக்குள் இல்லை. மெல்ல சத்தம் எழுப்பாமல் பால்கனியை நோக்கி சென்றான்.

பவுர்ணமி நிலா பிரகாசமாக ஒளிவீசி கொண்டிருக்க, கைகளை கட்டி வானத்தை பார்த்தவாறு நின்றிருந்தாள் தமிழ்செல்வி. அவளின் அந்த கோலம் ரவிவர்மாவின் ஓவியத்தை நினைவூட்டியது.

"உங்களுக்கு மாடில மாதிரி பொண்ணு வேணும்னு தான சொன்னிங்க???" நித்யாவின் கேள்வி காதில் ஒலித்தது.

எந்த ஒப்பனையும் இல்லாமல் எந்த வித அலங்கார விளக்குகளின் உதவியும் இல்லாமல் அந்த இடத்தில் ஒளிர்ந்த அவள் அழகும் நளினமும் வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் இருக்குமா என தோன்றியது ராம்க்கு.

"ராம் பழிவாங்கறேன்னு சொல்லிட்டு இப்படி ஜொள்ளு விடறியே???" அவன் மனசாட்சி வெளியே குதித்து வந்து அவனை கேலி செய்ய, "அதுவேற இது வேற" என அதனை தூக்கி உள்ளே போட்டவன் மெல்ல நடந்து அவளின் பின்னால் சென்று நின்றான்.

"நிலால பாட்டி வடை சுடறாங்களானு பாக்கறியா? " அவளின் அருகே திடீரென கேட்ட குரலில் அதுவரை வேறு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த தமிழ், அலறி அடித்து கொண்டு பின்னால் திரும்பினாள்.

ஒருநொடியில் அவள் முகமெல்லாம் வேர்த்து அவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்பது போல இருந்தது.

"சே.,..நீங்களா? அறிவே இல்லையா உங்களுக்கு?" அவளின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை.

"ஏதோ ஜான்சி ராணி மாதிரி பேசுன...இப்போ என்ன இப்படி பயந்து நடுங்கற?? உன் ஹார்ட் பீட் எனக்கு கேக்கும் போல இருக்கு...எல்லாம் வெறும் வாய் பேச்சு தானா?" அவளின் அருகே சாய்ந்து நின்றபடி கேட்டான் ராம்.

அவனுக்கு பதில் சொல்லாமல் அந்த புறம் திரும்பி நின்றாள் தமிழ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.