(Reading time: 13 - 26 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கேட்டார் விசாலம்.

"தெரியல பாட்டி" தமிழ்செல்வியின் பதில் சொல்ல, "எனக்கு யாரும் சொல்லலையே... அவ அம்மா மீனாட்சி கூட சொல்லல. இந்த ராம் பய எங்க? அவனாவது ஒரு போன் பண்ணி சொல்லணும்ல...அவனை கூப்டு நான் கேட்கறேன்" விசாலம் குரலில் கோபம் இருந்தது.

"இ...இல்லை பாட்டி அவரு வெளிய போயிருக்காரு..."தமிழ்செல்வி தயக்கத்துடன் சொல்ல, "வெளியவா?? காலங்காத்தால ஏழுமணிக்கு வெளிய என்ன வேலை??? சரி நித்யா எழுந்துட்டாளா? அவ கிட்ட கொடு நான் கேக்கறேன்"  விசாலம் விடாமல் கேட்க, மறுமுனை அமைதியானது.

"செல்வி...உன்னை தான் கேக்கறேன். நித்யா எங்க?" விசாலம் குரல் சற்றே உயர்ந்து ஒலிக்க, "இல்லை பாட்டி அவங்க எழுந்திரிக்கல...எழுந்ததும் கூப்பிட சொல்றேன். கொஞ்சம் வேலை இருக்கு பாட்டி அப்பறம் கூப்பிடறேன்" என்றவள் விசாலத்தின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். ராமுடன் நித்யாவும் போயிருக்கிறாள் என சொல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது. நீ ஏன் போகவில்லை என்று கேட்டால்? எனக்கு போக விருப்பமில்லை என்று சொல்லவா?  இல்லை அவர்கள் போகும்போது அழைக்கவில்லை என்று சொல்லவா? எங்கே போயிருக்கிறார்கள் என்று கூட சொல்லாமல் தான் போனார்கள்...ஆனால் இதில் எதை சொன்னாலும் அவர்கள் நடுவில் இருக்கும் பிரச்சனை வெளியே வந்துவிடும்... அம்மாவுக்கு தெரிந்தால் தவறாக இந்த திருமணத்தை நடத்தி விட்டோம் என வேதனை படுவார்கள்...அதற்க்கு எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது. அவர்கள் கூப்பிட்டாலும் நான் போயிருக்கப்போவது இல்லை... பின் எதற்க்காக வருந்தவேண்டும்...எழுந்து சென்று முகத்தை கழுவி அழுந்த துடைத்தாள்.

"என்ன நித்து...இப்படி திடிர்னு ஒரு டெஸிஸன்? உனக்கு ஐரோப்ல கிடைக்கவேண்டிய ஸ்காலர் ஷிப் என்னாச்சு? நீ ஏன் சிக்ஸ் மந்த்ஸ்னு சொல்லிட்டு மூணு மாசத்துல திரும்பி வந்த?" அருகே அமர்ந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த நித்யாவிடம் கேட்டான் ராம்.

அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்து நிமிர்ந்தவள் "ராம் லைஃப்ல எப்போவுமே ஒரு விஷயம் அந்த சூழ்நிலையை பொறுத்து தான் முக்கியத்துவம் பெறும். இந்த ஐரோப் யூனிவர்சிட்டியம் அப்படி தான். எனக்கு இப்போ அது ஹை ப்ரையாரிட்டி இல்லை. இப்போ என்னோட ப்ரையாரிட்டி வேற. அதுக்கு தான் இந்த காலேஜ்ல நான் மேஜர் பண்ணலாம்னு இருக்கேன். அதே மாதிரி எனக்கு உங்க கிட்ட இன்னொரு ஹெல்ப் வேணும்" ராம் உடன் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.