(Reading time: 13 - 26 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"ஏதாவது கேள்வி கேட்டா பதில் சொல்லணும்னு ஒரு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா?" ராம் கேட்க, தமிழுக்கு காலையில் இருந்த கோபம் எல்லாம் எண்ணெய் ஊற்றிய நெருப்பை போல எரிய தொடங்கியது.

"ஆமாம் எனக்கு மேனர்ஸ் இல்லை தான். உங்களுக்கு தான் நல்ல மேனர்ஸ் தெரிஞ்ச ஆளெல்லாம் இருக்காங்களே... வீட்ல மூணு பெரு இருந்தாலும் இன்னொருத்தர் சமைச்சிருந்தாலும் ஒரு கர்ட்டசிக்கு கூட அவங்களுக்காக வெயிட் பண்ணாம, நான் டயட்ல இருக்கேன்னு ஊரை ஏமாத்திட்டு நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு சமையல்ல உப்பு இல்லை, உரப்பு இல்லன்னு சொல்ற, வேற லெவல் மேனர்ஸ் தெரிஞ்சவங்க...அங்க போயி பேச வேண்டியது தான...ஓ...ஒரு வேளை தூங்கிறதுக்கு முன்னாடி ஆப்பிள் ஜூஸ் எதுவும் கொடுக்கணுமோ??? அதை சொல்ல தான் வந்திங்களா? மேனர்ஸ்ஸாம் மேனர்ஸ்..." படபடவென பொரிந்தவள் வேகமாக அறைக்கு செல்ல, ஆவென அவள் போவதையே பார்த்தபடி நின்றான் ராம்.

அவள் சொன்னதை எல்லாம் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்த்து தான் அவனால் புரிந்து கொள்ளவே முடிந்தது.

"அம்மாடி என்ன ஒரு ஸ்பீடா பேசிட்டு போறா? மனுஷனால ஒரு நிமிஷத்துக்கு நூற்றைம்பது வார்த்தைகள் தான் பேசமுடியுமாம். ஆனா இவை முப்பது செகண்ட்ல முன்னூறு வார்த்தை பேசுவா போலயே!!!" தலையை சிலுப்பி கொண்டவன் அறைக்குள் செல்ல, முதுகை காட்டியபடி சோபாவில் படுத்திருந்தாள் தமிழ்.

அவளை பார்த்தபடி தன்னுடைய படுக்கையில் அமர்ந்தவனுக்கு அவள் தூங்கிவிட்டாளா, இல்லை நடிக்கிறாளா என தெரியவில்லை.

விளக்கை அணைத்து விட்டு படுத்தவனுக்கு ஒரு விஷயம் மட்டும் விளங்கவில்லை. அன்று மருத்துவமனையில் அவளை அவன் பேசியது அவனுக்கு மறக்கவில்லை. ஆனால் அப்போது அவனை அவள் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், கோபம் கொள்ளாமல் விலகி சென்றாள். ஆனால் இன்று அவளின் இந்த கோபம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. ஒரு வேளை இவளுக்கு உண்மையாவே சமைக்க தெரியாதோ??? அதான் இவ்ளோ கோவம் வருது போல... சாப்பாடு விஷயத்துல அடக்கி வாசிக்க வேண்டியது தான். இல்லைனா கோவத்துல சாப்பாட்டுல ஏதாவது பேதி மருந்தை கலந்தாலும் கலந்துருவா...என்று எண்ணியவன் உறங்கி போனான். 

"என்னது நித்யாவா??? அவ பாரின்ல போயிருந்தா? இப்போ எப்படி அங்க திடிர்னு???" புரியாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.