(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

விட கிடைச்சதை படிச்சேன்....  பாரு இதுவும் என்னை நல்ல நிலைமைக்குத்தான் கொண்டு வந்திருக்கு....  ரெண்டு வருஷமா காலேஜ்ல மெடல் வாங்கிண்டு இருக்கேன்...”

“ப்ச் நீ சொல்றது புரியறதுண்ணா.... இருந்தாலும் மனசே ஆறலை... நாம நன்னாத்தானே விளையாடினோம்... நம்மளை எடுத்திருந்தா டீம் ஜெய்ச்சிருக்குமேன்னுதான் தோணறது... அதுவும் இல்லாம  முதல் மேட்ச் அன்னைக்கு அத்தனை சந்தோஷமா போனேன்... என்னோட கிளாஸ்ல எல்லார்க்கிட்டயும் நான் விளையாடப் போறதை பத்தி அப்படி சொன்னேன்... எங்க PT டீச்சர் கூட கார்த்தால அஸ்செம்ப்ளி போது அத்தனை பெருமையா சொன்னா ... திங்கக்கிழமை  ஸ்கூல்க்கு போனா எல்லாரும் என்னைப் பார்த்து கிண்டல் பண்ணப் போறா....”

“கிண்டல் பண்றவா எல்லாத்துக்கும்தான் பண்ணுவா மைத்தி... என்னைக்கூடத்தான் இன்ஸ்டிடியூட்ல வேலை செய்யறதுக்கும், ஆடிட்டர்கிட்ட வேலை செய்யறதுக்கும் கிண்டல் பண்றா... ஜாலியா டையத்த போக்காம வேலை, வேலைன்னு ஓடறேன்னு...  அதையெல்லாம் காதுல போட்டுண்டா நாம முன்னேற முடியாது... உனக்கும் அதேதான்... இந்த ஒரு மேட்ச் விளையாடாட்டா என்ன... போன மாசம் கூட ---- ஸ்கூல் கூட விளையாடினேளே ... நீ கூட பெஸ்ட் பௌலர் பரிசு வாங்கினியே... அந்த மாதிரி இன்னும் நிறைய வாய்ப்பு வரும்... போன ஒரு வாய்ப்பை நினைச்சு வருத்தப்பட்டுண்டு உக்காராத....”

“ஹ்ம்ம் புரியறதுண்ணா ... ஒரு ரெண்டு நாள் கஷ்டமா இருக்கும்... அப்பறம் நானே சரியாய்டுவேன் கவலைப்படாத...”

“மைத்தி உன்னை குஷிப்படுத்தறா மாதிரி ஒண்ணு சொல்லட்டா...”

“என்னது பத்ரிண்ணா....”

“நாளைக்கு பீச்ல  காரணீஸ்வரர் கோவில் தெரு  பசங்களோட எங்களுக்கு மேட்ச் இருக்கு... அதுல நீ எங்க டீம்ல விளையாடப் போற.... சந்தோஷமா....”

“ஹே சூப்பர்ண்ணா... சீனுண்ணா ஒண்ணும் சொல்லலையா...”

“அவன்தான் உன்னையும், துளசியையும் சேர்த்துக்க சொன்னான்... ஸோ நாளைக்கு பீச்க்கு போறோம்... மேட்ச் விளையாடறோம்... வின் பண்றோம்...”, பத்ரி சொல்ல தன் சோக மோடிலிருந்து சந்தோஷ மோடிற்கு மாறினாள் மைத்தி....

மறுநாள் மாலை பீச்சிற்கு சென்று பத்ரியுடன் விளையாடி தன் மனக்குறையை தீர்த்துக்கொண்டாள் மைத்தி...

“மைத்தி, துளசி ரெண்டு பெரும்  ஏகப்பட்ட காண்டுல இருந்தேளா... இன்னைக்கு போலிங், பாட்டிங் ரெண்டுத்துலயும் பொளபொளன்னு பொளந்துட்டேள்... எதிர் டீம் பசங்க ஆடிப்போய்ட்டா... அடுத்த வாட்டி நீங்க வந்தா அவா எங்களோட மேட்ச் விளையாட வர

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.