(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

 வாட்டர் பாட்டில் கீழே விழவும் தண்ணீர் அவன் முகத்திலும் மூக்கிலும் சிந்திவிட்டது. ஹச் ஹச்... என்று தும்மியவன் தன் டவலை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு கோபத்துடன் பந்து வந்த திசையை நோக்கினான்.

 பூங்குழலியும் சாட் எப்படி இருந்தது..

 ‎ எனக்கும் அடிக்க தெரியும்ல என்று அசால்ட்டாக சொல்லிவிட்டு ஒரு நக்கல் சிரிப்பு அவனை பார்த்து சிந்திவிட்டு அங்கிருந்து சிட்டாய் ஓடி மறைந்தாள்.

 இதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பீட்டி மாஸ்டர் இருவருக்கும் புரை ஏறிவிட்டது.

 என்ன பெண் இவள்... இப்படி செய்து விட்டாள். என்ன செய்யப் போகிறானோ தெரியவில்லையே... பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் செய்தால் பிரச்சினை பெரிதாகும். அதனால் அவனைப் போய் சரி செய்யலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் அவனை நோக்கி சென்றார்கள்.

 ஆனால் அதற்குள் அவன் வகுப்பறையை நோக்கி கோபமாக நடந்து சென்றான். குள்ள வாத்து... உனக்கு எவ்வளவு திமிரு... என் மேலேயே பால் அடிக்கிறியா. உன்ன பாத்துக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தான்.

 அப்படியே செல்ல அதன் பிறகு வந்த ஒரு வாரங்கள் அவன் குழலியை பார்க்கவே இல்லை. அதனால் அவனது கோபம் சற்று தணிந்து இருந்தது. வகுப்பு முடிந்ததும் டிராயிங் காம்பெடிஷன் காக வரையலாம் என்று நினைத்தவன் டிராயிங் ரூமை நோக்கி நடந்தான். அங்கு பிரஷர்ஸ் நிறைய பேர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்க அடுத்த அறையில் சென்று தன்னுடைய பெயிண்டிங்கை தொடர்ந்தான்.

 அந்த நேரம் அவன் அறை வாசலில் ஒரு குரல் கேட்டது. இது உன்னோட பெயிண்டிங்கா... நல்லாவே இல்லை என்ற குரலைக் கேட்டதுமே குழலியின் குரல்தான் என்று புரிந்து கொண்டான். ஒரு வாரமாக பார்க்காததால் தணிந்திருந்த கோபம் மொத்தமும் சேர்ந்து இப்பொழுது அவன் முகத்தில் தாண்டவமாட கோபத்தோடு அவளை நோக்கி திரும்பியவன் மரியாதையா இங்கிருந்து சென்று விடு. இல்லையென்றால் என்றவன் ஒரு குட்டிப் பெயிண்ட் பாட்டிலை தூக்கி அவளை எறிவது போல பாவனை செய்ய அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 சற்று நேரத்தில் வெளியே வந்தவன் வராந்தாவில் உட்கார்ந்து வரைந்து கொண்டிருந்த பூங்குழலியை பார்த்து அவள் அருகில் சென்றான். அவள் பிரஷ்ஷை பிடித்திருந்தது தவறு என்பதை உணர்ந்தவன் குள்ள வாத்து... முதல்ல பிரஸ் பிடிக்க கற்றுக்கொள். அதன்பிறகு ட்ராயிங் பண்ணலாம் என்று சொல்ல அவள் வகுப்பு மாணவிகள் அவளைப் பார்த்து சிரித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.