(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

கையில் பட்டயத்தை உரியவளை போல  ஆக்ரோஷமாக நின்றாள் பூங்குழலி. அவளை பார்த்தவனுக்கு மனதில் ஏதோ தோன்ற அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.

 நடந்து செல்லும் பொழுது இதே மாதிரி இதற்கு முன்பும் நடந்து இருக்கிறதோ... இவள் பேசிய வசனமும் இவள் பேசிய விதமும் இதற்கு முன்பாக கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்துக்கொண்டே நடந்தான்.

 இயல்புக்குத் திரும்பிய பூங்குழலியும்... குயிலியா...அது யார் நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசித்து விட்டு அவளும் சென்று விட்டாள்.

அடுத்த இரு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ராகவ் நேரடியாக ஆபிசுக்கு சென்றுவிட்டான்.

 இரவு லேட்டாக வந்தாலும் அவன் ராமுவிடம் பேசாமல் ஒருநாளும் படுக்கைக்கு சென்றதில்லை. இது அவன் தாய்க்கு பிடிக்காது. ஆனாலும் அவன் தாய்க்கு தெரியாமல் செய்யும் ஒரே காரியம் ராமுவிடம் பேசுவது தான். இன்றும் அதே போல மெதுவாக ராமுவின் அறைக்குச்செல்ல ராமு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

 அருகில் சென்றதும் அவர் தோளில் கை வைக்க இயல்பு நிலைக்கு வந்தவர் டீ போட்டு தரவா தம்பி என்றார்.

இல்லை இல்லை... உங்களிடம் இன்று பேசவே இல்லையே. அதனால் தான் சிறிது நேரம் பேசி விட்டு செல்லலாம் என்று வந்தேன்.. என்று சொல்ல இருவரும் டைனிங் டேபிளை நோக்கி நடந்தனர்.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பூங்குழலியின் தொல்லை தாங்க முடியவில்லை என்று அவளைப் பற்றி ராமுவிடம் கூறிவிட்டு அவரையே கூர்மையாக பார்த்தான் ராகவ்.

என்ன நடந்தது தம்பி என்று ஆர்வமாக கேட்ட ராமுவிடம் அவளைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தான்.

ரொம்ப தைரியமான பொண்ணு போல... என்ன தம்பி என்றான் ராமு. 

ஆமா ராமு...ஆனால் அவள் எது மீதும் கவனம் எடுத்துக் கொள்வது போலவே தெரியவில்லை. ஆனால் எளிதாக கற்றுக் கொள்கிறாள் என்று அவளைப் பற்றி பெருமையாகப் பேசினான். அதற்குள் அவன் கண்முன் அவள் ஃபுட்பால் அடித்து தண்ணீரை தன் மீது ஊற்றியது நினைவுக்கு வர கோபத்தில் குள்ள வாத்து குள்ள வாத்து என்றான்.

அது என்ன தம்பி குள்ள வாத்து....

அவ ரொம்ப குட்டையா இருப்பாள். ஏனோ அவளைப் பார்த்ததும் கொள்ள வார்த்தை என்று சொல்லவேண்டும் என்று தோன்றிவிட்டது‌ இதுவரை நான் யாருக்கும் பெட்நேம் வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.