(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவளுக்கோ கோபமாக வந்தது. வேகமாக ராகவ் அறைக்குள் வந்தவள் அங்கிருந்த பெயிண்ட் எடுத்து அவனது டிராயிங் மீது பூசிவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்.

 தனக்குத் தேவையான சில கலர் பெயிண்டை வாங்கிக்கொண்டு வந்தவன் ட்ராயிங் இருக்கும் நிலையை பார்த்து இதை செய்தது அவளா மட்டும் தான் இருக்க முடியும் என்று எண்ணிக்கொண்டு வெளியே வந்தான். குனிந்த தலை நிமிராமல் இருந்த அவளை பார்த்ததும் கோபம் பயங்கரமாக வந்தது. அவளை நோக்கி சென்றான்.

ஏய் குள்ள வாத்து... எதுக்காக இப்படி செஞ்சா என்று கேட்டான். என் பேரு பூங்குழலி... ஒழுங்கா பேரை சொல்லி கூப்பிடு, இல்ல இன்னும் என்ன எல்லாம் செய்வேன்  என்று எனக்கே தெரியாது என்று விரல் நீட்டி அவனை மிரட்டினாள். ஒரு நொடி அவன் அதிர்ந்து தான் போய்விட்டான்.

இதற்கு மேல் இங்கே நின்றால் அவளை அடித்து விடுவோம் என்று அறிந்தவன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான். அவன் கோபமாக சென்றதை பார்த்த குழலிக்கு சற்று பாவமாக தெரிந்தது.

 வேகமாக அவன் அறைக்குச் சென்றவள் ஏதேதோ செய்து கொண்டு இருக்க, தன்னுடைய திங்ஸ் எடுப்பதற்காக அங்கு வந்த ராகவ் அவளைப் பார்த்தான்.

 அவளை என்று சொல்வதைவிட அந்தப்பெயிண்டிங்கை என்று சொல்வதே சரியாக இருக்கும். அவன் வரைந்த ஓவியம்தான். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக அது இருந்தது. ஆனால் மிகவும் அழகாக இருந்தது. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இவளால் எப்படி முடிந்தது என்று யோசிக்க அவனுக்கு காலையில் அவள் பாலை அடித்த விதம் கண் முன்னால் வந்தது. என்னை விட பெரிய ஆளா இருப்பாள் போலயே...பார்த்தவுடன் கற்றுக் கொள்கிறாளா அல்லது இவள் ஏற்கனவே கற்றுக் இருக்கிறாளா என்று யோசித்து குழம்பிவிட்டான் ராகவ்.

அவனை அறியாமலேயே அவன் உதடுகள் டேலண்ட்டட் கேர்ள் என்று சொல்லவும் இப்பவாவது என்ன பத்தி தெரிஞ்சுக்கோ என்று விழிவிரித்து கூறி அவனைப் பார்த்தாள்.

 அவனும் பதிலுக்கு நீ என்ன மைசூர் மகாராணியா உன்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு என்றான்.

ஏன் ராணியாய் இருந்தா மட்டும்தான் தெரிந்து கொள்வாயா... என்று பதிலுக்கு அவள் கேட்க ஆமாடி குயிலி என்றான் அவன்.

நான் குயிலி தான்... தாய்நாட்டிற்காக தன்னுயிரை துச்சமாக மதித்து உயிரை துறந்த குயிலியின் பெயரை கொண்ட குயிலி தான்டா... என்று வீரமாக பேசியவள் கண்களை உருட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.