(Reading time: 12 - 23 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அழைத்ததே இல்லை என்றான் ராகவ் ‌.

அவன் குள்ள வாத்து என்று சொன்னதும் ராமுவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியும் எதையோ தெரிந்துகொள்ளும் ஆர்வம் தோன்றியது. ஒரு நிமிடத்தில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் மறைத்துக் கொண்ட ராமு .....தம்பி இதே விஷயத்தை வேறு யாராவது செய்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றான் .

அப்பவே ஓங்கி ஒரு அறை விட்டு இருப்பேன். ஆனால் இவள் பெண்ணாக போய்விட்டாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதுவும் விளையாட்டுத்தனமாக செய்கிறாள் என்றவன் நான் இன்று அவள் பெயரை மறந்து குழலி என்று சொல்வதற்கு பதிலாக குயிலி என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவள் பதில் சொன்னாள் பார்க்கலாம் ...என்று அவள் கூறியது போலவே அவனும் கூறிக் காட்ட அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமுவின் முகத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் கலந்து தெரிந்தது. ஆனால் அதை ராகவ் கவனிக்கவில்லை.

 அவன் மீண்டும் ஏதேதோ பேச ராமுவிற்கு குயிலி என்ற வார்த்தையிலேயே மனம் நின்று விட்டது. தன்னிடம் விடைபெற்றுப் கிளம்பியவனிடம் தம்பி அந்தப் பெண்ணைப் பற்றி உங்கள் அம்மாவிடம் சொல்லலாம் அல்லவா என்றான்.

ஐயோ ராமு.. அதை மட்டும் செய்து விடாதீர்கள். அவள் ஏதோ விளையாட்டுத்தனமாக இருக்கிறாள். அவளைப் பார்த்தால் வசதி படைத்தவள் போலவும் இல்லை. நீங்கள் அம்மாவிடம் சொல்லி அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடப்போகிறது. விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் செல்லவும் தான் ராமுவுக்கு இயல்பாக மூச்சுவிட முடிந்தது.

ராமுவிற்கு ஒரு பெரிய கலக்கம் வந்து மனதில் ஒட்டிக்கொண்டது. கடவுளே... நீதான் இனி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கும் எந்த தீங்கும் நடந்துவிடக்கூடாது என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டான்.

அறைக்கு வந்த ராகவ்... நான் ஏன் அவளை குயிலி என்று அழைத்தேன். குயிலி என்று ஒரு பெயர் இருக்கிறதா... இதுவரை அப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லையே... அவளை குயிலி என்று அழைத்தபோது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அவளை எனக்கு மிகவும் தெரிந்தவளாக தெரிந்தது. எனக்கு குயிலியை முன்பே தெரியுமா... அதனால்தான் அவளிடம் கோபப்பட முடியவில்லையா... யார் அவள்... எதையும் மறைக்காத என் தாயிடம் அவளைப்பற்றி மறைக்க நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவள் முக்கியமானவளா... யார் அவள்.. ஏன் அவள் என் அருகில் இருக்கும் பொழுது என் மொத்த சொந்தமே என்னோடு இருப்பது போல் உணர்கிறேன்.. அவளிடம் கோபப்பட வேண்டும் என்று நினைத்தாலும் என்னால் முடியவில்லையே...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.