(Reading time: 12 - 23 minutes)
Nenchil thunivirunthaal

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி

னிமை அவனது மிகப்பெரிய மித்திரனாகிப் போனது. அவன் யாரென்று எண்ணினானோ அது அவன் இல்லை என்பது அவனை மனதளவில் காயப்படுத்தி சென்றது. தந்தையைக் காண வேண்டும் என்ற ஆவல் எல்லாம் கடந்து அவர் தானே தன்னை கருவிலே கருவறுக்க எண்ணினார் என்று மட்டுமே அவன் மனம் உரைத்துக் கொண்டிருந்தது. தாயென்று யாரையோ சுட்டுகிறார்கள். ஆனால் தன்னை பேணிக் காத்தவர் தன் தாயில்லை என்பதனை மட்டும் அவனால் ஏற்கவே இயலவில்லை. தனிமையில் சிந்தித்தவனாய் தந்தையென்றுத் தான் உருவாக்கிய பொம்மையினை நோக்கிக் கொண்டிருந்தான் உடையான். இதனை அறியவா அவா பூண்டிருந்தோம் என்று எண்ணும் வேளை மனமே அவனைத் தூற்றியது.

"உதய்! சாப்பிட வா!" எந்நிலையிலும் தாயின் அந்த அரவணைப்பும், உரிமையும் சிறிதளவும் மாற்றம் காணவில்லை. அவர் அழைப்பிற்கு அவன் விடை மறுக்க, குழம்பியவராய் அவன் தோளை உலுக்கினார் தர்மா. அவர் முகத்தினையும் நோக்க துணிவு எழவில்லை. தாயும், தந்தையும் பிரிந்ததற்குத் தானே காரணம் என்ற எண்ணம் அவனுக்குள்!

"என்னை ஏன்மா எடுத்து வளர்த்தீங்க? அப்போவே என்னைக் கலைத்திருக்கலாம்ல!" மனம் வெதும்பியவனாய் வார்த்தைகளை விட்டான் அவன். அவனிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளின் தாத்பரியம் விளங்காமல் குழம்பியவராய் அவன் எதிரில் வந்து நின்றவர், சற்றும் சிந்திக்காமல், அவன் கன்னத்தில் அறைந்தார். அவன் அதனை எதிர்நோக்கி இருக்கிறான் என்பது அவன் முகபாவனையிலே விளங்கியது.

"மா!" அவனை பேச விடாமல் விழுந்தது மற்றொரு அறை! அடுத்தடுத்து இரு அறைகள் அவனுக்கு விழ, பலகனியில் அதனைக் கண்டுக் கொண்டிருந்தவர்களில் மாயா பதறிப்போக, அவள் கரம் பற்றி தடுத்தான் ஆதித்யா.

"என்னங்க! அங்கே..." அவன் சாதாரணமாய் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

"வாங்கட்டும்!என்னத் தப்பிருக்கு!" என்றுக் கூறிவிட்டு ஏதும் நிகழாததைப் போல உள்ளே சென்றான் அவன். இங்கு அறை வாங்கி நின்றவனோ தேம்பிக் கொண்டிருந்தான்.

"கொஞ்ச நேரம் வெளியே நடந்துட்டு வரலாம் வா!" சாதாரணமாய் அவர் அழைக்க, விசும்பியவண்ணம் தாயினைப் பின் தொடர்ந்தான் அவன். நீண்ட நேரம், நீண்ட நேரமாய் மௌனம் மட்டும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தது.

"டேய் உனக்கு என்னடா பிரச்சனை இப்போ? ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? இதுக்காடா இத்தனை வருடம் நெஞ்சிலும், மடியிலும் சுமந்து உன்னை வளர்த்தேன்?", என்றதும் அவன் மனம் மேலும் உடைந்துப் போனது.

"ஆனா, நான் பிறந்தது..." ஏதோ கூற வந்து பாதியிலே நிறுத்தினான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.