(Reading time: 12 - 23 minutes)
Nenchil thunivirunthaal

அவ வாழ்க்கையைத் தேடிக்கிட்டா அது அவ விதி! அதுக்கு நீ காரணமில்லை. எனக்கு நீ முக்கியம் உதய்! எனக்கு உலகமே நீயும், ஆதியும் தான்டா! ஏன்டா புரிந்துக்க மாட்ற?" அவ்வளவு நேரமும் கட்டுண்ட கண்ணீர் பீறிட்டு வெளியேற, அதைக்கண்டு பதறியவனாய் தாயிடம் சரண் புகுந்தான் உடையான்.

"ஸாரி...ஸாரிம்மா! அழாதீங்க...நான்..நான் இனி அப்படி பேச மாட்டேன்!" மனதார மன்னிப்பை வேண்டினான் அவன். கண்கள் எல்லாம் கலங்கிப் போயிருந்தது அவனுக்கு!

"நீ யாருடைய பையன்னு சொல்லு!" என்றவரின் வினாவில் ஆயிரமாயிரம் ஏக்கங்கள்! அவனிடமிருந்து எவ்வித விடை வரும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தது அந்த ஏக்கம்!

"நான் என்னிக்கும் தர்மாவுடைய மகன்தான்! அதை அந்தக் கடவுளாலக் கூட மாற்ற முடியாது!" தீர்க்கமாக அவன் உரைத்த விடையில் குளிர்ந்துப் போனதுத் தாயுள்ளம்! தந்தையினைக் குறித்துக் கூட அவன் சிந்திக்கவில்லை, தாய் ஒருத்தி மட்டுமே அவன் விழிகளுக்குத் தெய்வமாய் நின்றிருந்தாள்.

"ங்கா! இங்கே வா!" எப்போதும் தனது அறையே கதி என்று இத்தனை வருடமாய் தன்னைத் தானே சிறைப்பிடித்திருந்தவர், நடுக்கூடத்தில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருந்த விதம் யாவரையும் திகைப்புக்குள்ளாக்கியது. என்னவென்று விவரம் அறிய அழைத்தவரின் முன் நின்றாள் கங்கா.

"உட்கார்!" கையிலிருந்த நாளிதழைப் புரட்டியவண்ணம் கூறினார் இராகவன்.

"பரவாயில்லை பெரியய்யா! சொல்லுங்க!" விழிகள் உருட்டி அப்பாவியாய் கேட்டாள் அவள்.

"உட்காரும்மா!" சிறுப்புன்னகையோடு அவர் கூற, தலையசைத்து அவர் எதிரில் அமர்ந்தாள் கங்கா.

"அந்த டவுனில் இருந்து வந்திருக்கானே! அவனை உனக்குத் தெரியுமா?" என்றதும் சட்டென வெளிறிப் போனது அவன் முகம். நிறம் மாறிப்போன அவள் முகத்தினை அவர் கவனிக்கத் தவறவில்லை.

"யா..யாரு? யாரை கேட்கிறீங்க?" தெரிந்தும் தெரியாமல் விழித்தாள் அவள்.

"அன்னிக்கு ஒருத்தன் மாலைப்போடுற பூஜைக்குப் போனோமே!" என்றதும் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது அவளுக்கு!

"என்னம்மா? அவனைத் தெரியுமா உனக்கு?" நீண்ட பெரும் மௌனத்தினை நல்கினாள் கங்கா.

"அவரை ஒருமுறை தான் பார்த்திருக்கேன். " நிகழ்ந்த அவர்களின் முதல் சந்திப்பினைக் கூறினாள் கங்கா. அதனைக் கேட்டவரின் முன் மெல்ல மெல்ல மலர்ந்தது.

"மற்றப்படி எனக்கும், அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!" பெண்மைக்கே உரிய அச்சத்தில் வெகுளியாக உரைத்தாள் கங்கா.

"ம்...சரிம்மா நீ போ! போய் வேலையைப் பாரு!" என்று அவர் கூறிவிட,குழம்பிய மனதோடு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.