(Reading time: 12 - 23 minutes)
Nenchil thunivirunthaal

உடையான். அவரது அரவணைப்பில் கிட்டிய ஆறுதல் இனி ஏதும் தேவையில்லை என்ற நிலைக்கு அவனைத் தள்ளியது.

"எதுவும் இல்லை..எல்லாம் சரிப்பண்ணிடலாம்!" பொன்மொழிகள் உதிர்த்தார் தர்மா. பால வயது தொடங்கி இதே அவன் பணி! மிக மென்மையான மனம் இளையவனுக்கு, எவ்வித கள்ளத்தனமும் அதில் இருந்ததில்லை. சிறு சிறு சங்கடங்களுக்கு எல்லாம் தாயினை நாடி சென்றுவிடுவான். காலம் மாறியும், மாறவில்லை அப்பாலகன்.

"உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும்! அவங்க எங்கே இருக்காங்க!" ஆயிரம் வேதனைகள் இருந்த சமயத்திலும் ஈன்றவளை காணத் துடித்தது அவன் மனம். மனதோரம் சிறு சலனம் எட்டிப் பார்க்க, பதில் கூற தயங்கினார் தர்மா.

"கௌரி இறந்துப்போய் பத்து வருடம் ஆகுது உதய்!" என்றதும் துணுக்குற்றது அவன் மனம். அப்பதிலை அவன் நிச்சயமாய் எதிர்நோக்கவில்லை என்பதே உண்மை!

"அவ ஆசைப்பட்ட மாதிரியே அவளை விரும்பினவனை கல்யாணம் பண்ணி சந்தோஷமாகத் தான் வாழறான்னு நினைத்தோம். ஆனா, தினந்தினம் அவன் குடித்துவிட்டு வந்து அவளைத் துன்புறுத்தி இருக்கான். அந்தக் கொடுமை தாங்காமல் அவள் தற்கொலை பண்ணிக்கிட்டா!" வெளிப்பட்ட அந்த உண்மை அவன் உயிரையே நடுநடுங்க செய்தது.

"அவளுடைய கடந்தக் காலம் ஒருவேளை தெரிந்திருக்குமோன்னு பயந்து நாங்க விசாரித்தில், அவ...அவளுக்கு கல்யாணம் ஆகியும் கரு உருவாகாத காரணத்தால, தினந்தினம் அவன் சித்ரவதை பண்ணி, கடைசியில அவ இறந்தே போயிட்டா!" அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! காலப்போக்கில் அனைத்தும் மறந்துப் போகும்தான், ஆனால் கர்மம்...? கர்மம் எவரையும் மறக்கப் போவதில்லை...ஒரு செயல் நாம் செய்ய தொடங்கும் முன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கர்மமானது இங்கு எவரையும் விட்டு வைப்பத்தில்லை. எந்தச் சிசுவை அவமானமாய் கருதினார்களோ அவனை விடவா ஒரு புண்ணியத்தை இக்கருவில் சுமக்கப் போகிறாய் என்றுக் கிட்டிய தண்டனை அவன் பெற்ற அவமானங்களுக்குப் பழித்தீர்த்துச் சென்றது.

"என்னால யாருக்குமே நிம்மதி இல்லைம்மா!" மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் தொடங்கினான் அவன்.

"என் சாபம் எல்லாரையும் தண்டிக்குது! முதல்ல நீங்க, அப்பறம் அவங்க, நாளைக்கு...." என்றவன் சட்டென நிறுத்தினான். ஏதோ ஓர் ஆழ்ந்த சிந்தனை அவனைத் தீர்க்கமாக சிந்திக்க வைத்தது. அவன் யாரைப் பற்றி சிந்திக்கிறான் என்பதனை நன்கறிவார் தர்மா. புத்தி பேதலித்த தன் மகனை ஆறுதல் படுத்தும் மார்க்கமா ஒரு தாய்க்கு கடுமையானது?

"இங்கே பாரு கண்ணா! நீ என்னுடைய வரம்டா! நான் கஷ்டப்பட்டேன்னு யார்டா சொன்னா? கௌரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.