(Reading time: 12 - 23 minutes)
Nenchil thunivirunthaal

தலையசைத்து எழுந்துச் சென்றாள் கங்கா.

"என்னடா? என்னாச்சு?" தாயின் வினாவில் ஈர்க்கப்பட்டவரின் இதழ்கள் மேலும் மலர்ந்தன.

"உடையான் அவளை விரும்புறான்னு நினைக்கிறேன்!" உரிமையோடு அவர் கூறிய விதத்தில் மெய் சிலிர்த்துப் போனார் அகிலாண்டேஷ்வரி.

"நானே சொல்லணும்னு நினைத்தேன். அவக்கிட்ட சொல்லிட வேண்டியது தானே!" விளங்காமல் கேட்டார் அவர்.

"அது எப்படிம்மா மருமகளிடம் நான் இதைப் பற்றி பேச முடியும்? அதுக்கு அவன் அம்மாத் தான் வரணும்! நான் எதுவும் செய்ய முடியாது!" தன் மகனின் நிலை மாறுதல்கள் எண்ணி உண்மையில் தாய் மனம் பூரித்துத்தான் போயிருந்தது. ஆம், இத்தனை ஆண்டுகள் கழித்து மனதில் ஓர் அமைதி குடிக்கொள்ளாமல் இல்லை. இத்தனை ஆண்டுக்கால தண்டனைகள் யாவும் முற்றுப்பெற போகிறது என்ற எண்ணம் அவருள் எழாமலும் இல்லை. மகனிடம் உண்மைநிலையை கூறியாகிவிட்டது. அவனிடம் மன்னிப்புக் கேட்கத்தான் வேண்டும்! அவன் மன்னிக்கிறானோ, தண்டிக்கிறானா அதனுக்கும் உடன்பட்டுத் தான் ஆக வேண்டும். இனி நடக்கிறதோ நடக்கட்டும் என்ற முடிவிற்கு வந்தவராய் துணிந்தே இருந்தார் அவர்.

"தய்!" எங்கோ கழனியின் ஓர் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு புல்லினை பிய்த்துக் கொண்டிருந்தவனை உரத்த குரலில் அழைத்தான் ஆதித்யா. தமையனாரின்அழைப்பிற்கு செவிமடுத்தவனாய், 'என்ன' என்று நிமிர்ந்துப் பார்த்தான் அவனும்! அவனது வாடியமுகம் பலபல கதைகளை மிக வேகமாக புனைந்துத் தள்ளியது.

"இங்கே வா!" என்று சைகையில் அவன் கூற, புல்லினை வைத்துவிட்டு எழுந்தான் அவன். கரங்களில் ஒட்டியிருந்த மண்ணினை உதறிவிட்டு வந்தவனைக் கண்டும்,எவ்வினாக்களையும் மூத்தவன் தொடுக்கவில்லை.

"இப்படி உட்கார்!" தன்னருகே அமரும் ஆசனம் அவன் சுட்ட மறுப்பேச்சு பேசாதவனாய் அருகில் அமர்ந்தான் அவனும்!

"நானே கங்கா விஷயத்தை அம்மாக்கிட்ட சொல்லிடலாம்னு பார்க்கிறேன்!" என்றதும் தூக்கிவாரிப்போட்டது இளையவனுக்கு!

"அண்ணா?" கேள்வியோடு மூத்தவனை நோக்கினான் அவன்.

"நீ அந்தப் பொண்ணுக்கிட்டையும் சொல்லமாட்ட, அம்மாக்கிட்டையும் சொல்ல மாட்டன்னா என்னடா அர்த்தம்? ஏதாவது முடிவுக்கு வரணும்ல? அதுக்காகத் தானே இங்கே வந்த?" எதிரில் விரிந்த இயற்கைக் காட்சிகளை நோக்கியவண்ணமே வினவினான் அவன். ஏனோ இளையவனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.