தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 12 - சாகம்பரி குமார்
ரேச்சலின் வீட்டை கடந்து போகும்போது, ஒரு பாய்ஸ் சைக்கிளை வைத்துக் கொண்டு நின்ற ஜெமி சத்யனின் கண்ணில் பட்டான.
அவனை பார்க்கவும் சத்யனின் முகம் மாறுவதை ரஞ்சனும் கவனித்தான். தாத்தாவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தி இறங்கினர். அப்போது…
"ப்ரோ…" என்று ஜெமி அழைத்த குரல் கேட்டது. சத்யன் காதில் வாங்காத பாவனையில் அவ்விடம் விட்டு விரைந்தான். ரஞ்சன் நிதானித்து ஜெமியை பார்த்தான்.
"ஹா… நீங்க ரேச்சலை பார்த்தீர்களா… மழை பிடித்து விடும்போல... அவளை காணவில்லை"
"வரும் வழியில் ஒரு மரத்தின் அடியில் ரேச்சலின் சைக்கிள் இருந்தது. அவங்க அங்கே இருப்பாங்க" ரஞ்சன் சொன்னான்.
"தேங்க் யூ ப்ரோ" என்று சொல்லி கிளம்பிய ஜெமி… முக்கால் கால் சட்டை போட்டு… சிவப்பு நிறத்தில் மழை கோட் போட்டிருந்தான்.
அவன் சென்றபின் வீட்டிற்குள் ரஞ்சன் சென்றான். அறைக்கு சென்றபோது நந்தினி ஓய்வாக படுத்திருந்தாள்.
"எப்படி இருக்கே ஹனி"
"நாட் ஸோ பேட்!. கொஞ்சம் சோர்வா இருக்கு…"
"மனுகுட்டி ட்ரில் வாங்கறாளோ?"
"ஆமாம். ஓடிகிட்டே இருக்காள்"
"நீ அவளோட விளையாடுவதை குறைச்சுக்கனும்"
"அப்படித்தான் நினைப்பேன்… அவளோட க்யூட் முகபாவனையை பார்க்கும்போது டயர்ட் போயிடுமா… விளையாட ஆரம்பிச்சிடுவேன்."
"ரெஸ்டே இல்லையாக்கும்"
"அது… ரேச்சல் வந்து விட்டால், மனு என்னை தேட மாட்டாள். அவள் இங்கே இருந்து கிளம்பும்வரை அவளை விட்டு நகர மாட்டாள். ரொம்ப பிரியம்"
இங்கேயும் ரேச்சலா…?. அவன் அசுவராசியமாக உம் கொட்டினான்.
"என்ன உம்… மனுகுட்டி ரேச்சலிடம் ரொம்ப பிரியமாக இருக்கிறாள்னு சொன்னேன்… "
"அதுக்கு நான் என்ன செய்யணும்"
"நாமதான் ஏதாவது செய்யணும்… இப்படியே அண்ணனை விட்டுவிட முடியாது"
"?"
"புரியலையா… கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிடா…"
"ஆங்… இந்த டா… எதுக்கு?"