"சும்மா செல்லமா…"
"நீ ஏதோ ப்ளான் பண்ணிட்டே. அதை எக்ஸிக்யூட் பண்ண ஒரு அல்லக்கை வேணும். என்னை ஃபிக்ஸ் பண்ணிட்டே… புரியுது"
" நோ… டா… அல்லக்கை இல்லை… அஸிஸ்டென்ட்…"
"எருது என்று சொன்னாலும் மாடு என்று சொன்னாலும் ரெண்டும் ஒன்றுதான்… பாரம் இழுக்கணும்… "
"சோ… ஸ்வீட்… புரிஞ்சிடுச்சுல்ல… அடுத்து ஆக வேண்டியதை செய்பா"
"நான் மட்டும் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலைனு வச்சுக்கோ…"
"நானும்தான்… உன்னோட களிமண் மண்டைக்கு… இந்நேரத்துக்கு உன்னை வீட்டை விட்டு துரத்தி இருப்பேன்…"
"என்னையா… அடிப்பாவி… உங்க அண்ணனை பார்க்க வர்றப்ப காபியும் பக்கோடாவும் கொடுத்து கொடுத்து அடிமையாக்கிட்டு…"
"ஹா… ஹா… நான் போட்ட பக்கோடாவுக்கே.. அடிமையாயிட்டீங்க… பாவம்பா.."
"அப்படி ஒரு அப்பாவியா இருந்திருக்கேன்…"
"ஆஹாங்…"
"இப்பவும் பாரு… உன்னை மாதிரி திங்க் பண்ணாமல்… ரேச்சல் விஷயத்தில் சத்யனை கார்னர் பண்ணிட்டே இருக்கேன்."
"ஓ… இனிமே என்ன செய்ய போறீங்க"
"இந்த ஸ்நூக்கர் ஸ்டிக் இருக்குல்ல அதை வச்சு உங்க அண்ணனை தட்டு தட்டுனு தட்டி.."
"சட்டுனு வாழ்க்கை சக்கரத்தை ஓட விடப் போறீங்க.. சவுண்ட்ஸ் குட்…"
"தேங்க்ஸ்மா… நான் ரிலாக்ஸ் பண்ணிட்டு உங்கண்ணனை பார்த்து கதையை ஆரம்பிக்க பார்க்கறேன்…"
"ஓகே.." நந்தினி சிரித்தாள். ரஞ்சன் குளித்து உடை மாற்றி விட்டு சத்யனை தேடினான்.
சத்யன் அவனுடைய அறையின் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.
தெருவில் ஆள் ஆரவம் கேட்க… பார்வை பக்கத்து வீட்டை நோக்கியது. ரேச்சலும். ஜெமியும் இரண்டு சைக்கிள்களில் வந்து இறங்கினர். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்… ரேச்சல் ஜெமி போட்டிருந்த ரெயின் கோட்டை அணிந்திருந்தாள்.
போர்டிகோவில் நுழையவுமே அதனை கழட்டி ஜெமியிடம் திருப்பி தந்ததையும் பார்த்தான்…