தரும் காருண்யம் அவளிடம் கிடையாது… ஏழைகளிடம் இருந்து விலகியே இருப்பாள்…
முக்கியமாக அவனுடன் பழகும் விதத்திலும் ஒரு கண்ணியம் தெரிகிறது… முன்பெல்லாம் அவள் சொல்வதை ஜெமி உடனடியாக சிரமேற்கொண்டு செய்தாக வேண்டும்… நட்பு… உறவு என்று சொல்லிக் கொண்டு அவனை கெடுபிடி செய்வாள். கோபப்படுவாள்… மனது வலித்து போகும் வார்த்தைகளை பிரயோகிப்பாள்..
உனக்கு நேரம் இருந்தால்… சிரமமில்லை என்றால்… உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் … என்பது போன்ற வார்த்தைகளை இப்போது பயன்படுத்துகிறாள்… கோபமாக இருந்தால்கூட இயல்பாகவே இனிய வார்த்தைகளை பயன்படுத்துகிறாள்…
அவன் இந்தியாவிற்கு வந்த போது வேறு ஒரு எண்ணத்தில் இருந்தான். அத்தையிடம் நலம் விசாரித்துவிட்டு… அவர்களுக்கு உற்ற துணையாக ஜெமி இருப்பான் என்பதை உறுதிபடுத்தி சொல்லவே வந்தான். ஏனெனில் ஷீலா அத்தைக்கு உறவுகள் என்று யாரும் கிடையாது… அவர்களின் நல்ல குணம் அவனுக்கு மிகவும் பிடிக்கும்…. மற்றபடி ரேச்சலை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பது மேத்யூஸின் விருப்பம் மட்டுமே… அவனுக்கு அதில் விருப்பம் இல்லை. ரேச்சலுக்கு அவனுடைய வாழ்க்கை துணையாகும் தகுதியில்லை என்று நினைத்திருந்தான். ஆனால்…
இந்த மாடல் ரேச்சல் அவனை கவர ஆரம்பித்து விட்டாள். இது ரேச்சல் இல்லை என்று சத்தியம் செய்யகூட தயாராக இருந்தான்… ஆனால் ரேச்சலை விட்டு விலக தயாராக இல்லை…
இதுபற்றி அத்தையிடம் பேச வேண்டும் என்று எண்ணினான். அத்தை திருமணம் பற்றி பேசினால் ரேச்சலை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் ஷீலா அத்தை எதற்காகவோ தயங்குகிறார். அது என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தான்.
மறுநாள் அதற்கான நேரம் அவனுக்கு கிடைத்தது. ஷீலா அத்தை தனியாக க்ளினிக்கில் இருந்தார்கள்… ரேச்சல் மனுகுட்டியை பார்க்க போயிருந்தாள். இதுதான் சரியான நேரம் என்று அவரிடம் சந்தேகத்தை கேட்டான்.
"ஆன்ட்டி… என்னிடம் எதையோ மறைக்கிறீர்களா… தயக்கம் தெரிகிறதே"
"உன்னிடம் நானே பேச வேண்டும் என்று நினைத்தேன்… நீயே ஆரம்பித்து விட்டாய். ரேச்சலிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா?"
"ஆஹாங்… ஏதாவதா… நிறைய மாறி இருக்கிறாள்… அவள் முன்போல இல்லை. சொல்லப்போனால் அது விரும்பத் தக்க மாற்றம்தான்."
'ஆமாம்.. ரொம்பவும் பிரியமாக இருக்கிறாள்… நீ விரும்பினால் ரேச்சலை திருமணம் செய்துதர மேத்யூஸும் நானும் நினைத்திருந்தோம். அவள் எங்களை விட்டு வெகு தொலைவு