(Reading time: 14 - 27 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

செல்வதை ஏற்று கொள்ளும் இதயம் இருந்தது. ஆனால் இப்போதுஅவளை விட்டு பிரிய என்னால் முடியுமா என்று தெரியவில்லை."

"ஒருவேளை ரேச்சலை நான் மேரேஜ் செய்துடேன்னா உங்களையும் எங்களோடு அழைந்து சென்று விடுவேன். ஆனால்  பிரச்சனை அது இல்லைஒரு குழப்பம் உங்களிடம் தெரிகிறது…"

"ரேச்சல் அந்த விபத்திற்கு பின் பழைய விஷயங்களை மறந்து விட்டாள்."

"அது எனக்கு தெரியும். ஆனால் முற்றிலும் புதியதாக மாற முடியுமா?. பழக்க வழக்கம்..பேச்சு நடை பாவனை...அனைத்திலும் மாற்றம் தெரிகிறது."

"ஒரு விபத்தின் பின் மறதி இருக்கும்.. ஆனால் …" அவரே தொடர்ந்தார்.

"வேறு ஒரு ஆத்மா உள்ளே புகுந்து கொண்டது போல மாறுவார்களா என்னசரி…  அவளுக்கு பழைய நினைவுகள் இல்லாமல் போய் விட்டன.. ஆனால் எப்போதாவது திரும்ப வரும்என்று சொன்னார்களாஅவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தீர்களா.. இது என்ன வகை அம்னீசியா?"

"இல்லைஅவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டில் இதுபற்றி இல்லைம்நான் அதை சரியாக படிக்கவில்லை.."

"வாட் ஆன்ட்டி ஒரு டாக்டராக இருந்துட்டு இப்படி சொல்லாமா?"

"ஆரம்பத்தில் நானும் மேத்யூஸ் இறந்த கவலையில் இருந்ததால் அப்போது கவனிக்கவில்லை. பிறகும் ரேச்சலை கேர் செய்யும் பொறுப்பில் முழு கவனத்தையும் செலுத்தியதால் அந்த ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க வில்லை. மேத்யூஸின் இழப்பை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு விஷயத்தை நான் தொடர விரும்பவில்லைரேச்சலை குணப்படுத்த என் முழு கவனமும் தேவைபட்டதுசிலவற்றை கடந்தே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஜெமி… "

"அதனால்.."

"அந்த விபத்து தொடர்பான எதையும் கிளற நான் விரும்பவில்லை"

"ஓகேஆன்ட்டிஎன்னிடம் அந்த ஃபைலை கொடுங்கள். நான் படித்து தெரிந்து கொள்கிறேன்."

ஜெமிக்கு ஒரு கவலை இருந்தது. இந்த ரேச்சல் இப்படியே இருந்து விட்டால் நல்லதுதான். ஆனால் பழைய நினைவுகள் திரும்பி பழைய ரேச்சலாக மாறி விட்டாள் எனில்

அவன் ஷீலாவிடம் இதை சொல்ல…

"அதுதான் எனக்கும் பயம். அதிலும் அவளுக்குஇப்போதைய நினைவுகள இல்லாமல் போனல்நம்முடைய நிலமை மோசமாகி விடும்.அவளுக்கு பதில் சொல்ல என்னால் முடியாது"

"அவளுடைய ரிப்போர்ட்டை பார்த்தால் தெரியலாம்…"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.