"இது என்ன புது பழி?. நான் ஏன் ஜெமியை பார்த்து ஓடி வர வேண்டும்?. " என்று கேட்டான்
"அதற்கான காரணத்தை நீ தான் சொல்ல வேண்டும் "
" முதலில்… அவன் அழைத்ததே என் காதில் விழவில்லை… பிறகு நான் எப்படி அவனை திரும்பிப் பார்த்திருக்க முடியும்?"
"அவன் அழைத்தது கேட்டுவிட்டுதான் நீ ஓடி வந்தாய் என்பது எனக்கு தெரியும். சாதாரணமாக நீ நடப்பதற்கும் விரைவாக வேகமாக நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது"
"ஓ… என்ன விதியாசம்?"
" மனு குட்டி உன் அத்தை பொண்ணு தனுவை பாத்துட்டு ஓடுவது போல நீ பயந்துட்டு ஓடி வந்துட்டே.. இரண்டடி… நாலடியாச்சு…"
"இப்போ உனக்கு என்ன வேண்டும்?"
"வாட் ஈஸ் கோயிங் ஆன்?"
"உனக்கு நான் ஏன் பதில் சொல்லணும்" என்று சத்யன் கேட்டான். உடனே ரஞ்சன்,
"ஏன்னா எனக்கும் கொஞ்சம் ஃபாலோவர்ஸ் இருக்காங்க… உனக்காக நான் எதையாவது வெட்டி முறிப்பேனு நம்பறாங்க."
"ஃபாலோவர்ஸா… யாரது…?!"
"மாமாவும் அத்தையும்தான்… ப்ச்… நீ என்ன நோக்கத்துல இருக்கேங்கறது தெரிஞ்சாதானே அடுத்த ஸ்டெப்பை ப்ளான் செய்ய முடியும்."
"யூ ஆர் வெரி கீன்.. ரஞ்சன். நந்தினி கூட பேசறதை விட என் கூட பேசறதுதான் அதிகமாக இருக்கும் போல. என்னை ஃபாலோ பண்ற... என்னை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க... எப்படி நடப்பேன்.. எப்படி பார்ப்பேன்லாம் டீடெய்லா சொல்ற… ஸோ… ரொமான்டிக்… "
"எப்படி எல்லாம் பேச்சை மாத்திக்கிட்டே போகிறாய். உண்மையை சொல்லனும்னா நான் உன்கிட்டதான் அதிகம் பேசுறேன்... கரெக்ட்.! அதேபோல நந்தினி ரேச்சல் கிட்டதான் பேசுவாள். என் கூட பேசுவதே கிடையாது. எங்களுக்குள் பேச்சு வார்த்தை குறைஞ்சு போச்சு. ஹாய்… ஹலோ… எப்படி இருக்க... இதுபோல ஆயிடுச்சு"
"இந்த பழியும் என் மீதுதானா?. நந்து எதுக்கு ரேச்சல்கிட்ட பேசணும்… சாரி… பேசிகிட்டே இருக்கணும்"
"ஆஹாங்…ரேச்சலை ஸ்டடி பண்ணுகிறாள் போல... யார் யாருக்கு என்ன திட்டம் இருக்குனு எனக்கு தெரியலையே.."
"ஸ்… அப்பா… நீ நேரடியாக கேள்"