"ஆங்… ரேச்சல் விஷயம்தான்…அவள் மீது கவனப்படுத்துகிறாய்.."
"நாட் லைக் தட்…'
"---"
" ஓகே… ஒருவிதத்தில் ரேச்சலை எனக்கு பிடிக்கிறது. அவளிடம் இருக்கும் சுதந்திரம் என்னை கவர்கிறது. கோபமோ… மகிழ்ச்சியோ... துக்கமோ உடனேயே வெளிப்படுத்தி விடுகிறாள். மனதிற்குள் எந்த சுமையையும் வைத்துக் கொள்ளாமல் லகுவாக ஒரு பட்டாம் பூச்சிபோல பறக்கிறாள்."
"----"
"ரோஜாக்களை ரசிக்கிறாள்… மனுகுட்டியின் மொழியை புரிந்து கொள்கிறாள்… எடின்னு ஒரு சின்ன பையன்… அவனுடன் டைம் ஸ்பென்ட் பண்ணுகிறாள்… என் மீது செங்கலை வீசும் திட்டத்தையும் வைத்திருக்கிறாள்…"
"ஆ…"
"இப்போ ட்ராப் பண்ணிட்டளாம். அதை அவளே சொல்கிறாள்… எனக்கு அவளுடைய பிகேவியர் பிடிச்சிருக்கு… பொறாமையாகவும் இருக்கு… மனசை லேசா வச்சுக்கற பிராப்தம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன?"
"ஆனால்.. நீ ஏன் டிஸ்டர்ப் ஆகிறாய்?. அவள் கையில இருந்த குட்டியூண்டு மோதிரத்தை முறைத்து பார்க்கிறாய். ஜெமியை அலட்சியம் செய்கிறாய்…"
"அந்த ஜெமி அவளுக்கு தகுதியானவன் இல்லைனு நினைக்கறேன். அதோட வெளிப்பாடாக இருக்கும்."
"தட்ஸ் வாட் ஐம் ஆஸ்கிங்… அவள் என்னவானால் உனக்கென்ன"
"உண்மையை சொல்லணும்னா… எனக்குள்ள ஒரு பயம் இருக்கு. இந்த ரேச்சலை புரிஞ்சுகிட்டவன்தான் அவளை கல்யாணம் செய்துக்கணும். அவளை… அந்த சுதந்திர மனப்பான்மையை… குழந்தைதனத்தை போற்றுகிறவனால்தான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்… ம்… அந்த பொண்ணு கண்கலங்கி நிற்பதை சகித்துக் கொள்ளவே முடியாதுன்னு தோணுது… அது சிரிச்சுகிட்டே இருக்க வேண்டிய முகம்…"
"!!!!?"
"வெல்… நான் ரொம்ப பேசிட்டேனு நினைக்கிறேன்… இதோட நிறுத்திக்கலாம்" அவன் லேப்டாப்பில் கவனமாகி விட்டான்.
அதற்கு ஸ்...டாப்புனு அர்த்தம்… அதை புரிந்து கொண்ட ரஞ்சன் மௌனமாக வெளியேறினான்.